வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

கமலஹாசனுடன் கூட்டணி வைத்த சரத்குமார்.. பரபரப்பாக சூடு பிடிக்கும் 2021 தேர்தல் களம்

சினிமா பிரபலங்கள் அரசியலில் குதிப்பது தற்போது அதிகரித்துக் கொண்டே போகிறது. ஏற்கனவே அறிவித்தபடி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலை விட்டு விலகி விட்டார்.

ஆனால் கமலஹாசன் தேர்தல் களத்தில் உள்ளார், அவருக்கு ஆதரவாக மக்கள் நீதி மையம் கட்சியுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி தற்போது உறுதியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வந்தது. இதில் சரத்குமார் மற்றும் ராதிகா போன்ற அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே கூட்டணி உறுதியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

kamal-sarathkumar
kamal-sarathkumar

இந்த கூட்டணியில் கமலஹாசன் தான் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்றும் மக்கள் விரும்பும் கூட்டணியாக எங்கள் கூட்டணி இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு இப்போது வழங்குவது ஏன்.? மக்களுக்காக ஆட்சி தலைவர்கள் சிந்திக்க வேண்டும், ஓட்டுக்காக சிந்திக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

Trending News