வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பஞ்சதந்திரம் ராமாக மாறிய கமல்.. ஆண்டவரின் அலப்பறை புகைப்படம்

Kamal : உலகநாயகன் கமலஹாசன் இப்போது பல படங்களில் பிசியாக இருப்பதால் தன்னுடைய விருப்பமான பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டுக் கொடுத்திருக்கிறார். இப்போது கமலுக்கு பதிலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் கமல் ஒருபுறம் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் தக்லைஃப் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தியன் 3 படத்திலும் நடித்த முடித்திருக்கிறார். இந்த சூழலில் சண்டை பயிற்சியாளர் அன்பறிவு இயக்கும் படத்திலும் கமலஹாசன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

கமலின் 237 வது படமான இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. இவ்வாறு நடிப்பிலும் ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருக்கும் கமல் மற்றொருபுறம் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் நிறைய படங்களை தயாரித்தவர்.

ஆண்டவரின் புதிய அவதாரம்

kamal-latest-look
kamal-latest-look

இந்த சூழலில் ஆண்டவரின் அலப்பறை புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. எப்போதுமே தனது தோற்றத்தில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் வித்தியாசம் காட்டக் கூடியவர் தான் கமல். இப்போதும் தன்னை இளமையாக வைத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் பஞ்சதந்திரம் படத்தில் ராம் கதாபாத்திரத்தில் உள்ளது போல குறுந்தாடி வைத்து புது லுக்கில் மாஸ் பண்ணுகிறார் கமல். இது எந்த படத்திற்கான கெட்டப் என்பது தெரியவில்லை. ஒருவேளை பஞ்சதந்திரம் பார்ட் 2வாக இருக்குமோ என பலரையும் யோசிக்க வைக்கிறது.

அவ்வாறு பஞ்சதந்திரம் பார்ட் 2 வந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆண்டவரின் ஒவ்வொரு அவதாரமும் ரசிகர்கள் வியக்கும்படி தான் இருக்கிறது. இந்த வயதிலும் நடிப்பில் மீதுள்ள ஈடுபாடு காரணமாக தன்னுடைய கெட்டப்க்காக பல வேலைகளை கமல் செய்து வருகிறார்.

Trending News