வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அமரன் ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்த கமல்.. இருந்தாலும் ஆண்டவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டுபா!

Amaran OTT Release: இருந்தாலும் கடலை முத்து ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்ற ஒரு காமெடி டயலாக் வடிவேலுக்கு வரும். அது இப்போது நடிகர் கமலஹாசனுக்கு தான் பொருத்தமாக இருக்கிறது. 2020 ஆண்டு ரிலீஸ் ஆன விக்ரம் படத்தை தொடர்ந்து 2024 இல் ரிலீஸ் ஆகி இருக்கும் அமரன் படத்திலிருந்து கமல் ஒரு தயாரிப்பாளராக ஜெயித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

சரியான கதை தேர்வு, கதாபாத்திரங்களின் தேர்வு என அத்தனையிலும் வெற்றி கண்டிருக்கிறது அமரன் படம். ரிலீஸ் ஆகி மூன்று வாரங்களில் 250 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. ரஜினி, விஜய் தொடர்ந்து மிக குறுகிய காலங்களில் 100 கோடி வசூல் செய்த ஹீரோவாக சிவகார்த்திகேயன் வந்து விட்டார்.

அமரன் ஓடிடி ரிலீஸ்

அமரன் படம் சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி இருக்கிறது என தான் சொல்ல வேண்டும். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்று, அவருடைய மனைவி இந்து ரெபேக்கா வர்கீசின் அழகான காதல் என முத்திரை பதித்து விட்டது இந்த படம்.

சமூக வலைத்தளங்களில் எந்த பக்கம் திரும்பினாலும் அமரன் பட காட்சிகளும், பாடல்களும் தான் கொண்டாடப்பட்டு வருகிறது. தியேட்டர் உரிமையாளர்கள் சங்கமே முன்வந்து அமரன் படத்தை தியேட்டரில் இருந்து எடுத்து விடக்கூடாது, படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என முறையிட்டு இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் முதல் கட்ட ஹீரோக்களின் லிஸ்டில் இருக்கும் சூர்யா நடித்த கங்குவா படத்திற்கு தியேட்டர்கள் ஒதுக்குவதே பெரிய சிக்கலாகும் அளவுக்கு அமரன் வளர்ந்து வந்திருக்கிறது. எப்போதுமே ஒரு படம் ரிலீஸ் ஆன பிறகு நான்கு வாரங்களில் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகிவிடும்.

ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் இந்த தேதியை ஒத்தி போடும் படி கேட்டிருந்தார்கள். ஆனால் போட்ட நிபந்தனையை மீறக் கூடாது என்பதற்காக கமலஹாசன் ஓடிடி ரிலீஸ்க்கு நாள் குறித்து இருக்கிறார்.

வரும் டிசம்பர் 5ஆம் தேதி இந்த படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என செய்திகள் வெளியாகி இருக்கிறது. இருந்தாலும் இந்த ரிலீஸ் தேதியை ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Trending News