ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

ஒரு வழியா அடுத்த இயக்குனரை லாக் செய்த உலக நாயகன்.. மணிரத்தினத்திற்கு கொடுத்த அல்வா

ஒரு வழியாக பல போராட்டங்களுக்குப் பிறகு கமல் அடுத்த படத்தின் இயக்குரை புக் செய்துவிட்டார். ஏற்கனவே அவர் மணிரத்தினம் கூட அடுத்த  படம் பண்ண போகிறார். அவரிடம் கதை  கேட்டுவிட்டார் என்றெல்லாம் கூறப்பட்டது. KH 234 படத்தை மணிரத்தினம் தான் இயக்கப் போகிறார் என அடித்து சொல்லப்பட்டது. ஆனால் இப்போது மணிரத்தினத்திற்கு அல்வா கொடுத்துவிட்டு தன்னுடைய அடுத்த பட இயக்குனரை கமல் லாக் செய்து இருக்கிறார்.

நடிகராக மட்டுமல்லாமல் கமல் இப்போது தயாரிப்பாளராகவும் படு பிஸியாகிக் கொண்டிருக்கிறார். இவருடைய தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு தனது 48வது படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு வருமா ஆகஸ்ட் மாதம் துவங்கப் போகிறது. சிறுவயதிலிருந்து ஏகப்பட்ட கதைகளத்தில் நடித்த சிம்பு முதல் முதலாக இந்த படத்தின் மூலம் தான் வரலாற்று பின்னணி ஆன கதையில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.

Also Read: வரலாற்றுப் படத்தை மிஞ்சும் அளவிற்கு எஸ் டி ஆரின் 48 வது படம்.. 100 கோடி பட்ஜெட்டுடன் களமிறங்கிய கமல்

மேலும் இந்த பட்டத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்கும் ஐடியாவில் கமல் இருக்கிறார். அது மட்டுமல்ல சிவகார்த்திகேயன், சூர்யா, தனுஷ், விஜய், பகத் பாசில் உள்ளிட்டோரின் படங்களையும் அடுத்தடுத்து தயாரிக்கும் எண்ணத்தில் கமல் இருக்கிறார். இந்த பிசியான நேரத்தில் கூட ஒரு இயக்குனரிடம் கதை கேட்டுள்ளார். படத்தின் கதையில் முதல் பாகம் மிகவும் பிடித்துள்ளதாம்.

ஆனால் இரண்டாம் பாகம்  சில மாற்றங்கள் செய்ய சொல்லி இருக்கிறார். இதுதான்  கமலின் அனுபவம். கமலஹாசன் சொன்னது போல் எச்.வினோத்தும் ஸ்கிரிப்ட் தயாரிக்கும் வேலையில் மும்முரமாக செயல்படுகிறார். தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பை முடித்த பிறகு கமல் மணிரத்தினத்தின் படத்தில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் அதற்கு மாறாக அடுத்த படம் கமல்- எச். வினோத்  கூட்டணியில் உருவாகிறது.

Also Read: சிறுத்தை போல வேட்டையாட காத்திருக்கும் கமல்.. மலையாள நடிகர் உட்பட 5 பேருக்கு வலை வீசும் உலகநாயகன்

இதை கமலே தயாரிக்கிறார். 2014 ஆம் ஆண்டு சதுரங்க வேட்டை என்ற படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியதன் முலம் தனது சினிமா பயணத்தை துவங்கிய எச்.வினோத், அடுத்ததாக கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை இயக்கி ரசிகர்களின் ஃபேவரட் இயக்குனராக மாறினார்.

அதன் பிறகு தொடர்ந்து அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை இந்த வருடம் ரிலீஸ் ஆன துணிவு போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டார். இப்படி அஜித்தின் ஆஸ்தான இயக்குனருடன் உலக நாயகன் கைகோர்த்து இருப்பது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மேலும் எச்.வினோத்தின் காம்பினேஷனில் அஜித்துக்கு ஒர்க் அவுட் ஆனது கமலுக்கு எந்த அளவிற்கு வொர்க் அவுட் ஆகும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: தீபிகா படுகோனாவால் வாயடைத்துப் போன கமல்.. இருக்கிறதை விட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கெதி

Trending News