திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

பகத் பாசிலும் இல்லை, பாலிவுட் நடிகரும் இல்லை.. கமல், லோகேஷ் படத்தின் வில்லன் இந்த முன்னணி நடிகர் தான்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய குருநாதரான கமலஹாசனுடன் விக்ரம் எனும் படத்தில் இணைந்துள்ளார்.

விக்ரம் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இணையத்தில் செம வரவேற்பை பெற்றது. ஹாலிவுட் பட காப்பி என பல சர்ச்சைகள் வந்தாலும் பல மில்லியன் பார்வையாளர்களை குவித்துக் கொண்டிருக்கிறது அந்த டீஸர். அதிலும் அனிருத் இசை வேற லெவல் தான்.

லோகேஷ் கனகராஜ் கமலஹாசன் படத்தின் பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். மாஸ்டர் பட புரமோஷன்களும் சைடில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபல யூடியூப் சேனலுக்கு லோகேஷ் கனகராஜ் பேட்டி கொடுக்கும்போது நாசூக்காக கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் வில்லன் யார் என்பதையும் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் தான் தற்போது இணையதளங்களில் டாப் ட்ரெண்டிங். அவர் வேறு யாரும் இல்லை. தமிழ் சினிமாவில் கைவசம் அதிக படங்கள் வைத்து நடித்துக்கொண்டிருக்கும் பிரபல முன்னணி நடிகர் விஜய் சேதுபதிதான்.

தொகுப்பாளர் விக்ரம் படத்தின் வில்லனாக விஜய் சேதுபதியை போடலாமே என்று கேட்டதற்கு நாம் அதை அப்புறம் பேசிக்கொள்ளலாம் என இருவரும் மறுத்து விட்டனர். இதிலிருந்து கிட்டத்தட்ட விஜய் சேதுபதிதான் விக்ரம் படத்தின் வில்லன் என்பது உறுதியாகி உள்ளது.

vijaysethupathi-vikram-movie
vijaysethupathi-vikram-movie

முன்னதாக விக்ரம் பட வில்லன் கதாபாத்திரத்திற்கு மலையாள நடிகர் பகத் பாசில் மற்றும் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் என்பவரும் பரிந்துரை செய்யப்பட்டனர்.

- Advertisement -

Trending News