உலகம் முழுவதிலும் இருக்கும் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த விக்ரம் திரைப்படம் தற்போது தியேட்டர்களில் ரிலீஸாகி களைகட்டி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை கமல்ஹாசன் தன் சொந்த தயாரிப்பில் தயாரித்து நடித்துள்ளார்.
பல வருடங்களுக்கு பிறகு அவருடைய நடிப்பை பார்த்த ரசிகர்கள் தற்போது விக்ரம் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இதனால் தற்போது இந்தத் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே பல கோடி தாண்டும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தப் படத்தின் டிக்கெட் புக்கிங் அனைத்தும் ஹவுஸ்புல் ஆன நிலையில் தற்போது படத்தின் வசூலும் ஏகபோகமாக இருக்கிறது.
இதனால் இந்தத் திரைப்படம் வசூலில் பல சாதனைகளை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கமல் படத்திற்கு முதல் முறையாக இசை அமைத்துள்ள அனிருத் படத்தைப் பார்த்து மிகவும் எமோஷனல் ஆகி கதறி அழுததாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது, பொதுவாக நான் எந்த விஷயத்திற்கும் எமோஷனல் ஆக மாட்டேன். ஆனால் விக்ரம் திரைப்படத்தில் கமல் சாரின் நடிப்பு என்னை ரொம்பவும் கலங்க வைத்துவிட்டது. அந்த அளவுக்கு அவரின் நடிப்பை பார்த்து மிரட்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
அனிருத் ஏற்கனவே இந்தியன் 2, சபாஷ் நாயுடு போன்ற படங்களுக்கு இசையமைப்பதாக இருந்தது. ஆனால் அந்தப் படங்களின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தெரியாத நிலையில் விக்ரம் திரைப்படத்திற்கு அவர் இசையமைத்தார்.
கமல் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் கனவாக இருந்தது. அதனால் இந்தப் படத்தின் பின்னணி இசை, பாடல் முதற்கொண்டு அனைத்தையும் அவர் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் பார்த்து பார்த்து செய்துள்ளார்.
அந்த வகையில் கமல் தர லோக்கலாக இறங்கி குத்தாட்டம் போட்டு இருக்கும் பத்தல பத்தல பாடல் தற்போது ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது. மேலும் படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களின் நடிப்பு அனைவரிடமும் பாராட்டை பெற்று வரும் நிலையில் அனிருத்தின் இசைக்கும் ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.