வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கடைசி காலத்தில் அழைத்து அள்ளிக் கொடுத்த எம்ஜிஆர்.. நெகிழ்ந்து போன கமல்

Kamal-MGR: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தன் திறமைக்கு வாய்ப்பு பெற்று தமிழ் சினிமாவில் ஜாம்பவானாய் வலம் வரும் நடிகர் தான் கமல். இந்நிலையில் இவரின் செயலை கண்டு வியந்து போன எம்ஜிஆர் ஆல் அரங்கேறிய சம்பவத்தை பற்றி இங்கு காண்போம்.

நடிப்பிலும், கொடையிலும் மக்களிடையே வள்ளலாக பார்க்கப்பட்ட பிரபலம் தான் எம்ஜிஆர். தான் திரையுலகில் சம்பாதித்த பணத்தை மக்கள் நலனுக்காக வாரி கொடுத்த கொடைவள்ளல். தன்னை நாடி வந்தவர்களுக்கு உதவி கரம் கொடுப்பதில் இவரை அடிச்சசிக்க ஆளே இல்லை என சொல்லலாம்.

Also Read: சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படும் இளம் ஹீரோ.. விஜய், சிவகார்த்திகேயன் எல்லாம் பின்னாடி போங்கப்பா!

தன் சிறுவயதில் பிறரின் உதவியை நாடிய எம்ஜிஆர், தான் சந்தித்த வறுமையை ஒழிக்கவே தன்னை தேடி வருபவர்களுக்கு வாரி வழங்கி உதவி புரிந்தார். அவ்வாறு தனக்கு பிடித்தவர்கள் மற்றும் அவரிடம் அன்பாக இருப்பவர்களின் குறையை போக்க பணமாகவோ, நகையாகவும், வேறு வழியிலோ கொடுத்துக் கொண்டே இருப்பார்.

இது ஒரு புறம் இருந்தாலும், தன் கடைசி காலத்தில் உடல்நிலை குறைவால் அமெரிக்கா சிகிச்சை சென்று திரும்பிய இவர், கமலஹாசனை பார்க்க ஆசைப்பட்டாராம். குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போதே எம்ஜிஆர் உடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் கமல். மேலும் எம்ஜிஆரால் தூக்கி கொஞ்ச பட்ட நடிகர் என்றால் அது கமல் தான்.

Also Read: மக்களுக்காக உயிரை தியாகம் செய்த 4 கதாபாத்திரங்கள்.. மனதை கனக்க வைத்த சிம்புவின் மரணம்

அவ்வாறு இருக்க, எம்ஜிஆரின் அழைப்பை பெற்று, அவரை காண சிறு குழந்தையாக இருந்த தன் மகளான ஸ்ருதிஹாசனை கூட்டிச் சென்ற கமல் நெகிழும் வகையில், தன் மனைவி ஜானகியின் நகையை அள்ளிக் கொடுத்து மகளுக்கு போட்டு விடுமாறு கூறியிருக்கிறார்.

மேலும் கமலின் நடிப்பை பாராட்டிய எம்ஜிஆர், சகலகலா வல்லவன் படத்தை பார்த்து விட்டு இதைத்தான் நான் செய்கிறேன் நீ இதைவிட பெரிதாய் செய்ய வேண்டும் என ஆசி வழங்கி உள்ளார். எம்ஜிஆரின் அன்பிற்கும், பாராட்டிற்கும் ஆளாகி அவரிடம் பரிசு பெற்ற அத்தகைய தருணத்தை இன்றும் மறவாது தன் திறமையை நடிப்பின் மூலம் செயல் படுத்தி வருகிறார் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மகனின் 14-வது பிறந்த நாளை கொண்டாடிய விஷால்.. வெளியான புகைப்படத்தால் வந்த அதிர்ச்சி

Trending News