கமல் மற்றும் மகேஷ் பாபு இணைந்து நடிக்கும் படத்தை யார் இயக்கப்போவது என்று கேள்வி ரசிகர் மத்தியில் எழுப்பப்பட்டு வருகிறது, இதற்கு விடை கிடைத்துள்ளது.
கமலஹாசன் தற்போது விக்ரம் மற்றும் பாபநாசம் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இந்தியன் 2 படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்த பின் கமலஹாசன் மற்றும் மகேஷ்பாபு கூட்டணியில் முருகதாஸ் இயக்கத்தில் பிரமாண்ட படம் ஒன்று இயக்கப்போவதாக செய்திகள் தற்போது வெளிவந்துள்ளது.
இருவருமே தற்போது பிஸியான கால்ஷீட்டில் உள்ளதால், அதாவது மகேஷ் பாபு பரசுராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருவதாகவும், தொடர்ந்த ராஜமவுலி படத்தில் நடிக்க உள்ளதாகவும்.
கமலஹாசன் மற்றும் மகேஷ்பாபு பிஸியாக இருப்பதால் இவர்கள் கால் சீட் கிடைத்தவுடன் விரைவில் இந்த படப்பிடிப்பு தொடங்கும் என்று முருகதாஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்திய அளவில் இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்து உள்ளது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.