திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

டாப் ஹீரோக்களுக்கு தண்ணி காட்டும் கமல்.. கதி கலங்கி போக வைத்த சம்பவம்

சினிமாவை எப்போதுமே வேறொரு கோணத்தில் பார்க்கக் கூடியவர்தான் கமலஹாசன். தன்னுடைய 68 வயதிலும் உலகநாயகன் இப்பொழுது நடிப்பு, தயாரிப்பு என சகலத்திலும் கலக்கி வருகிறார். இவர் செய்யும் வேலையால் முன்னணி நடிகர்கள் எதுவும் பேச முடியாமல் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் கமலின் இந்தியன் 2 படப்பிடிப்பு கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிந்துவிட்டது. அடுத்து மணிரத்தினம், ஹெச் வினோத், தேசிங்கு பெரியசாமி என பெரிய பெரிய இயக்குனர்களை புக் செய்து இருக்கிறார்.

Also Read: 1000 கோடி முதலீடு, லைக்காவால் விழி பிதுங்கி நிற்கும் ரஜினி, அஜித்.. மரண அடி வாங்க போகும் டாப் ஹீரோக்களின் 4 படங்கள்

முதலில் தேசிங்கு பெரியசாமி மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் படத்தை உலக நாயகன் கமலஹாசன் தயாரிக்க இருக்கிறார். அதே சமயத்தில் இயக்குனர்களான மணிரத்தினம், ஹெச் வினோத் போன்ற இயக்குனர்கள் படத்தில் கமல் நடிக்கவும் செய்யப் போகிறாராம்.

இப்படி பெரிய பெரிய இயக்குனர்களை புக் செய்துவிட்டு மற்ற ஹீரோக்களை காக்க வைத்து விட்டார். ஹெச் வினோத்-க்காக காத்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். மணிரத்தினத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. ஆனால் நிச்சயம் மணிரத்தினம் கமலின் படத்தை முடித்துவிட்டு தான் ரஜினி படத்தை கையில் எடுப்பார்.

Also Read: தயாரிப்பாளர்களை பெரியளவில் வாழ வைத்த 6 படங்கள்.. கமலை பார்த்து பொறாமை பட்ட ரஜினி

அதேபோல் தேசிங்கு பெரியசாமி காத்துக் கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி. இப்படி பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாரும், இயக்குனர்களுக்கு கமல் போட்ட அக்ரிமெண்டால் காத்துக் கிடக்கின்றனர். கமல் விட்டால் ஒழிய இவர்கள் எல்லாம் மற்ற நடிகர்களின் படங்களை இயக்க முடியும்.

அதுவரை அந்த நடிகர்கள் காத்துக் கிடக்கிற நிலைதான் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இதுவும் சினிமா வளர்ச்சியை முடக்குவது போல் தான் தெரிகிறது. ஆகையால் கமல் வளரும் நடிகர்களுக்கு வழிவிட்டு தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மட்டுமே செய்ய வேண்டும் என்றும் சில விமர்சிக்கின்றனர்.

Also Read: தமிழ் படத்தில் இடம் பிடித்த மிரட்டலான 4 ஆங்கில பாடல்கள்.. ஆடுகளத்தில் ஆட்டம் போட்ட தனுஷ்

Trending News