ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கமல் படத்திற்கு வந்த தடை.. சதியை உடைத்து மண்டியிட வைத்த உலகநாயகன்

Actor Kamal: கமல் அளவுக்கு சினிமாவை நேசிக்க யாராலும் முடியாது. இதை பல சமயங்களில் நாம் வெளிப்படையாகவே பார்த்திருக்கிறோம். அதே போன்று புது புது விஷயங்களை நமக்கு அறிமுகப்படுத்திய பெருமையும் அவருக்கு உண்டு.

அப்படி உலகநாயகனாக மிரட்டி கொண்டிருக்கும் இவருடைய பல படங்கள் சர்ச்சைகளை சந்தித்து தான் வெளிவந்திருக்கிறது. அந்த வகையில் 2013ல் வெளிவந்த விஸ்வரூபம் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளானது நாம் அறிந்ததே. அப்போது கமல் படத்தை டி.டி.எச்-சில் வெளியிடப் போவதாக கூறினார்.

Also read: கமலிடம் இருந்து வாய்ப்பை தட்டிப் பறித்த மைக் மோகன்.. உஷாராக பல படங்களில் வெற்றியை கொடுத்த நடிகர்

இதனால் கொதித்துப் போன தியேட்டர் உரிமையாளர்கள் இனி உங்களுடைய படத்தை நாங்கள் திரையிட மாட்டோம் என்று பிரச்சனை செய்தனர். அது மட்டுமின்றி சங்கத்தினர் அனைவரும் சேர்ந்து கமல் படங்களுக்கு தடை விதிப்பதில் தீவிரம் காட்டி இருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து கமலுடைய அண்ணன் இதற்கு தீர்வு காண டெல்லிக்கு சென்றார். அங்கு விஸ்வரூபம் படத்திற்கு எதிராக பிரச்சனை செய்யும் திரையரங்கு உரிமையாளர் சங்கம் பற்றி CCI-யிடம் அவர் புகார் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து தீவிர விசாரணையும் நடந்திருக்கிறது.

Also read: கமலை வைத்து ரஜினியை சுளுக்கு எடுக்கும் ப்ளூ சட்டை.. நாயகன் படத்தால் சூப்பர் ஸ்டாருக்கு ஏற்பட்ட பீதி

அதன் முடிவில் சம்பந்தப்பட்ட சங்கம் பல கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என கமலுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. உடனே பதறிப்போன அனைவரும் கமலை சந்தித்து இந்த கேசை வாபஸ் வாங்க வேண்டும் என்று கெஞ்சி இருக்கின்றனர்.

அதன் பிறகு பல சமரச பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு இந்த பிரச்சனை ஒரு வழியாக ஓய்ந்தது. இப்படி தனக்கு எதிராக வந்த கத்தியை அவர்கள் பக்கமே திருப்பி மண்டியிட வைத்தார் கமல். அந்த வகையில் தடைகளை கடந்து சரித்திரம் படைத்த ஒரு படம் தான் விஸ்வரூபம்.

Also read: கமலிடம் ரெண்டு நிபந்தனையை வைத்த மம்மூட்டி.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

Trending News