திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இரவு 3 மணின்னு கூட பாக்காம அதுக்கு கூப்பிடுவாங்க.. புலம்பித் தவிக்கும் 46 வயது கமல் பட நடிகை

Actor Kamal: சினிமாவில் உள்ள நடிகைகள் பொது சொத்து என்பது போல பல நடிகைகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டு வருகிறார்கள். இதனால் நடிகைகள் சுதந்திரமாக வெளியில் கூட செல்ல முடியாமல் இருக்கிறார்கள். இந்த சூழலில் கமல் பட நடிகை ஒருவர் தனக்கு நடக்கும் கொடூரத்தை பற்றி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

அதாவது கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் சிலர் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று பகிரை கிளப்பியுள்ளார் நடிகை. இப்படியுமா செய்வார்கள் என்று அவர் சொன்ன பிறகு ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அந்த அளவுக்கு நடிகைகள் படாத பாடு பட்டு வருகிறார்கள்.

Also Read : கமல் மீது பயங்கர க்ரஷ்.. கதை கூட கேட்காமல் நடிக்க ஒத்துக் கொண்ட மாவீரன் பட நடிகை

அதாவது பாலிவுட்டில் நிறைய படங்களில் நடித்தவர்தான் மல்லிகா ஷெராவத். இவர் சீன மொழி படங்களிலும் அதிகமாக நடித்திருக்கிறார். சிம்புவுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். கமல் நடிப்பில் வெளியான தசாவதாரம் படத்திலும் வில்லனுக்கு ஜோடியாக மல்லிகா ஷெராவத் நடித்திருந்தார்.

இவருடைய முதல் திருமணம் விவாகரத்தில் முடிய அடுத்ததாக பிரெஞ்ச் தொழிலதிபர் ஒருவருடன் டேட்டிங் செய்து வருகிறார். இந்நிலையில் மல்லிகா ஷெராவத் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும் போது, கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து வருவதால் இரவு 3 மணி என்று கூட பார்க்காமல் போன் செய்த படுக்கை சிலர் அழைக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

Also Read : 78 வயசு வரை நடித்த ஜாம்பவான்.. 3 தலைமுறைகளை பார்த்த கமல் பட நடிகர்

படங்களில் இதுபோல கவர்ச்சியாக நடித்தால் நிஜத்திலும் அப்படிதான் என பலர் தப்பாக கணக்கு போட்டு தொந்தரவு செய்து வருகிறார்கள். தினமும் இந்த சித்திரவதை தான் அனுபவித்து வருவதாக மல்லிகா ஷெராவத் கூறியிருக்கிறார். இதுபோல் தொடர்ந்து இனிமேல் என்னை யாராவது தொந்தரவு செய்தால் போலீசில் புகார் கொடுத்து விடுவேன் என்றும் எச்சரித்து இருக்கிறார்.

பொதுவாக படங்களில் வாய்ப்புக்காக தான் நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்வதை கேட்டிருக்கிறோம். ஆனால் அவர்களுக்கு இதுபோன்ற பிரச்சனையும் வருகிறது என்பதை மல்லிகா ஷெராவத் சொல்லி தான் தெரிகிறது. இவரைப் போல் பல நடிகைகள் இன்னும் சித்திரவதையை அனுபவித்து தான் வருகிறார்கள்.

Also Read : இரங்கல் தெரிவித்தால் கடமை முடிந்ததா.? தூக்கிவிட்ட தயாரிப்பாளரின் மரணத்தை கண்டு கொள்ளாத பாரதிராஜா, கமல்

Trending News