லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் விக்ரம் படத்தின் பிசினஸ் ரிப்போர்ட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்படுகிறது. தமிழ்நாடு தியேட்டர்களை பொருத்தவரை விக்ரம் படத்தை தயாரித்த ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் மூலமாக சொந்தமாகவே ரிலீஸ் செய்கின்றனர்.
இதனால் தமிழகத்தில் கிட்டத்தட்ட 1000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதன் மூலம் 35 கோடிக்கு தமிழ்நாடு தியேட்டர்களில் திரையிடும் உரிமையை ரெட் ஜெயிண்ட் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் விக்ரம் படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை ஹாட்ஸ்டார் 98 கோடி கொடுத்து வாங்கி உள்ளது.
இதைப்போன்று தெலுங்கு டப்பிங் தியேட்டரில் ரைட்ஸை சுதாகர் ரெட்டி 6 கோடிக்கும், கேரள திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ஷிபு தமீம் 5.50 கோடி கொடுத்து வாங்கியுள்ளார். கர்நாடகா தியேட்டர்களில் விக்ரம் படத்தை திரையிடுவதற்கு கற்பக விநாயகா பிலிம்ஸ் நிறுவனம் 4.25 கோடி கொடுத்து வாங்கி உள்ளனர்.
இப்படி ஹிந்தி என வட இந்திய தியேட்டர்களில் திரையிடுவதற்காக என ஒட்டுமொத்த வரவாக 204.75 கோடி படம் ரிலீசுக்கு முன்பே விக்ரம் படம் பிஸ்னஸ் ஆகியுள்ளது. 118 நாட்களில் எடுக்கப்பட்ட விக்ரம் படத்தின் ஒட்டு மொத்த செலவு 150 கோடி. தற்போது பிசினஸ் ஆகியிருக்கும் விக்ரம் படத்தில் இருந்து மட்டும் 54.75 கோடி தயாரிப்பாளருக்கு மட்டுமே கிடைத்த லாபம்.
உலகநாயகன் கமலஹாசன் 150 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும், இதுவரை நடித்த படங்களில் வைத்துப்பார்த்தால் விக்ரம் படம் அளவுக்கு பிஸ்னஸ் ஆகவில்லை என்பதே விக்ரம் படம் செய்த மிகப்பெரிய சாதனை. இதுவரை கமலஹாசன் திரை வாழ்க்கையில் அவருடைய படம் ரிலீசுக்கு முன்பே 200 கோடி பிசினஸ் ஆகியுள்ளது இதுவே முதல் முறை.
விக்ரம் படத்தின் மூலம் தான் இதுவரை தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்த ரஜினி, விஜய் இவர்களை விக்ரம் படத்தின் மூலம் கமல் தொட்டுள்ளார். விக்ரம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டுக்குப் பிறகு வருகின்ற ஜூன் 3-ம் தேதி ரிலீஸ் ஆகியிருக்கும் விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அளவுக்கு அதிகமாக இருப்பதால் சுமார் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரியும் என திரைத்துறையினரால் கணிக்கப்படுகிறது.