கமலஹாசனுடன் சூப்பர் ஹிட் வெற்றி படத்தில் நடித்த நடிகை ஒருவர் கிட்டத்தட்ட 26 வருடங்கள் கழித்து மீண்டும் அவருடன் ஜோடி போடுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் கசிந்தன. இதுகுறித்து அந்த நடிகையே ஒரு பதில் கொடுத்துள்ளார்.
கமலஹாசன் தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்க சுறுசுறுப்பாக களம் இறங்கிவிட்டார். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படம் முதலில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அதற்கு முன்பே மலையாளத்தில் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என தெரிகிறது. இதன் படப்பிடிப்புகள் வெறும் ஒரே மாதத்தில் நடத்தி முடிக்கப்படவுள்ளதாம்.
முன்னதாக பாபநாசம் படத்தில் கமலுக்கு ஜோடியாக அவரது முன்னாள் காதலி கௌதமி நடித்திருந்தார். ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதால் மீண்டும் இருவரும் இணைவதற்கான சூழ்நிலை இல்லை.
இதன் காரணமாக பாபநாசம் படத்தில் யாரை நடிக்க வைத்தால் சரியாக இருக்கும் என படக்குழுவினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த வலையில் முன்னதாக நடிகை நதியா விழுந்ததாக கூறப்படுகிறது. இதுவரை நதியா மற்றும் கமலஹாசன் இருவரும் இணைந்து நடித்ததில்லை என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
இதற்காக நதியா சில கண்டிஷன்கள் போட்டதாகவும் கூறுகின்றனர். இந்நிலையில் ரசிகர் ஒருவர் சமூக வலைதளப் பக்கத்தில் மீனாவிடம் பாபநாசம் 2 படத்தில் நீங்கள் தான் ஹீரோயினா? எனக் கேட்டார். அதற்கு கமல்ஹாசனை தான் கேட்க வேண்டும் எனக் கூறிவிட்டார் மீனா. மீனாவும் கமலஹாசனும் கடைசியாக 1996 ஆம் ஆண்டு வெளியான அவ்வை சண்முகி படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அதன்பிறகு தெனாலி படத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் வந்து சென்றிருந்தார் மீனா.