ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பழைய சந்துருவாக மாறிய கமல்.. விவாகரத்து நடிகையுடன் உலக நாயகன் செய்த ஒர்க் அவுட் புகைப்படம்

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். லைக்கா பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடப்பாவில் நடந்து வருகிறது. இதற்காக தனி ஹெலிகாப்டர் மூலம் திருப்பதியில் இருந்து கடப்பாவுக்கு தினமும் கமல் பயணித்து வருகிறார்.

சமீபத்தில் அந்த ஹெலிகாப்டர் அருகில் நின்று கமல் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில் இந்தியன் படத்தில் சேனாதிபதி என்ற வயதான கதாபாத்திரம், சந்துரு என்ற இளமையான கதாபாத்திரம் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார்.

Also Read : 18 வருடத்திற்கு பின் திரையில் மோதிக் கொள்ளும் ரஜினி, கமல்.. பொன்னியின் செல்வனால் ஏற்பட்ட மோதல்

இப்போது சேனாதிபதி கதாபாத்திரத்திற்காக ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 4 மணி நேரம் கமல் மேக்கப் போடுகிறாராம். அதேபோல் சந்துரு கதாபாத்திரத்திலும் இளமையான தோற்றத்தில் உள்ளவாறு அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி ஷங்கர் கமலை மென்மேலும் மெருகேற்றி இந்தியன் படத்தில் நடித்த சந்திர போஸ் கதாபாத்திரம் ஆகவே மாற்றி வருகிறார்.

இதற்காக கமல் தற்போது உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நடிகை அமலாபாலும் அதே ஜிம்மில் வொர்க் அவுட் செய்துள்ளார். அமலா பால் இயக்குனர் ஏஎல் விஜய்யுடன் விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

Also Read : 3 லட்சத்தை ஒவ்வொரு படத்திலும் விட்டுக் கொடுத்த கேப்டன்.. தக்காளி சோறு கொடுத்து ஏமாற்றிய கமல்

எப்போதுமே படு ஸ்லிம்மாக இருக்கும் அமலாபால் இப்போது சற்று உடம்பு போட்டு உள்ளார். ஆகையால் ஜிம் வொர்க் அவுட் தீவிரமாக செய்து வருகிறார். அப்போது உலக நாயகனுடன் அமலாபால் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் கமல் இளமையாக இருப்பதை பார்த்து இந்தியன் 2 கெட்டப் தான் இது என்று இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.

மேலும் அமலாபால் விவாகரத்திற்கு பிறகு துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெயர் கிடைக்கவில்லை. ஆகையால் கமலுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டாளாவது ரசிகர்கள் நம்மை பற்றி பேசுவார்கள் என்ற எண்ணத்தில் அமலா பால் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து இப்போது அவருக்கு பெரிய இயக்குனர்கள் இடமிருந்து பட வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளதாம்.

kamal-amala-paul

Also Read : 90களில் அடுத்த கமல் என்று சொல்லப்பட்ட 3 ஹீரோக்கள்.. பெயரை கெடுத்து ரேஸில் இருந்து விலகிய நடிகர்

Trending News