உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அவரின் ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். தற்போது விக்ரம் படத்தில் பிசியாக நடித்து வரும் கமல்ஹாசன் அவரது நிறுவனம் மூலம் புதிதாக ஒரு படத்தை தயாரிக்க உள்ளார். அதன்படி இதுவரை பல படங்களை தயாரித்துள்ள ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் முதல் முறையாக நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார்.
டாக்டர் படம் மூலம் தற்போது ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோவாக மாறியுள்ள சிவகார்த்திகேயன் தற்போது கைவசம் டான், அயலான், சிங்கப்பாதை ஆகிய தமிழ் படங்களையும் எஸ்கே20 என்ற நேரடி தெலுங்கு படம் ஒன்றையும் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். இவர் முன்னதாக கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ரங்கூன் படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவே இல்லை.
அதற்குள்ளாகவே படம் ஒரு கணிசமான தொகையை லாபம் பார்த்து விட்டதாக கூறப்படுகிறது. அதன்படி இப்படத்தை சோனி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிப்பதால் அவர்கள் கமலிடம் சுமார் 70 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். இதில் சிவகார்த்திகேயன் சம்பளம் 30 கோடி மற்ற செலவுகள் 20 கோடி போக மீதமுள்ள 20 கோடி கமலுக்கு லாபம் தானாம்.
இதுதவிர படம் வியாபாரமானதும் அதில் 50% பங்கு கமலுக்கு வருமாம். இந்நிலையில் பிரபல ஓடிடி நிறுவனமான ஹாட் ஸ்டார் இப்படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்ற 40 கோடி, ஹிந்தி டப்பிங் உரிமைக்கு 10 கோடி என மொத்தமாக 50 கோடி ரூபாய் வழங்க தயாராக உள்ளதாம்.
இதுதவிர தியேட்டர் உரிமை மற்றும் பிற வியாபாரங்களில் இருந்தும் படத்திற்கு மேலும் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. எப்படி பார்த்தாலும் கமல் மற்றும் சோனி நிறுவனத்திற்கு ஜாக்பாட் தான். படம் தொடங்கப் போவது பிக்பாஸ் மூலம் மேடையில் உறுதிப்படுத்தினார் கமல்.கிடைக்கின்ற மேடையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை உலக நாயகனிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.