வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அவர் போட்ட விதை விருட்சமா வளந்து நிக்குது.. இன்று ரிலீசான 7 படங்களை ஓரம்கட்டி கெத்து காட்டிய கமல்

Actor Kamal: பொதுவாக கமலின் படங்கள் காலத்தை தாண்டி தான் பேசும். இதற்கு எடுத்துக்காட்டாக அன்பே சிவம் படத்தைக் கூட சொல்லலாம். இப்படம் வெளியான போது படு தோல்வி அடைந்தது. ஆனால் பல வருடம் கழித்து தான் இளைஞர்கள் கொண்டாடும் படமாக அன்பே சிவம் படம் அமைந்தது. இதே போல் கமலின் நிறைய படங்களை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

விருமாண்டி, ஆளவந்தான் போன்ற படங்களும் இதில் அடங்கும். இந்நிலையில் ஜூன் 23ஆம் தேதியான இன்று திரையரங்குகளில் கிட்டத்தட்ட எட்டு படங்கள் வெளியானது. இதில் சுந்தர் சியின் தலைநகரம் 2, விக்ரம் பிரபுவின் பாயும் ஒளி நீ எனக்கு, சுனைனா நடிப்பில் ரெஜினா மற்றும் பசுபதியின் தண்ட்டாடி போன்ற படங்கள் வெளியாகி இருந்தது.

Also Read : மேடையில் அவ்வளவு பேசிட்டு கமலுக்காக காத்துக் கிடந்த மாரி செல்வராஜ்.. மாமன்னன் ஆண்டவர் விமர்சனம்

ஆனால் புதிதாக வெளியான இந்த எல்லா படங்களையும் ஓரம் கட்டி உள்ளார் ஆண்டவர். அதாவது இன்று திரையரங்குகளில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான வேட்டையாடு விளையாடு படம் ரீ ரிலீஸ் ஆனது. மற்ற படங்களை காட்டிலும் இந்த படத்திற்கு தான் தியேட்டரில் கூட்டம் அலைமோதியது.

ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த படம் தான் உதாரணம். கிட்டத்தட்ட வேட்டையாடு விளையாடு வெளியாகி 17 வருடங்களுக்குப் பின் வெளியானாலும் இப்போது உள்ள இளைஞர்கள் கொண்டாடும் படமாக இருக்கிறது. இதற்குக் காரணம் கமலின் தொலைநோக்கு பார்வை தான்.

Also Read : வெங்கட் பிரபுவுக்கு சாதகமாய் மாறும் முடிவுகள்.. தளபதி 68க்கு கிடைத்த ஏமாற்றம்

அதுமட்டுமின்றி இப்படத்தில் கௌதம் மேனனின் இயக்கமும் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்தது. மேலும் ரசிகர்கள் கமல் போட்ட விதைதான் என்று விருட்சமாக இருக்கிறது என ஆர்ப்பரித்து கொண்டிருக்கிறார்கள். பொதுவாக ரீ ரிலீசில் சொற்ப படங்கள் தான் வெற்றி பெறும்.

அந்த வகையில் இப்போது வேட்டையாடு விளையாடு படத்திற்கும் ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு ஏக போகமாக இருந்து வருகிறது. இதனால் கமலின் பல படங்கள் மீண்டும் ரீ ரிலீஸ் செய்ய வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமின்றி கமல் சரியான நேரத்தில் ரீ என்ட்ரி கொடுத்து கெத்து காட்டி வருகிறார்.

Also Read : மொத்த யூனிட்டையும் குழப்பிய லோகேஷ் கனகராஜ். . பாபநாசம் கமல் போல் செய்த ட்ரிக்ஸ்

Trending News