திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பிக்பாஸில் இருந்து விலகும் கமல்.. மொத்த தயாரிப்பாளர் தலையில் இடியை இறக்கிய அதிர்ச்சி சம்பவம்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குவதால் மட்டுமே அந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகுவதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஏனென்றால் பதற வைக்கும் செய்தி வெளியாகியுள்ளது. இன்று ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு திரும்பிய கமல் திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டிருப்பதால் உடனே மருத்துவமனையில் சேர்த்து இருக்கின்றனர்.

Also Read: தூண்டிலை போட்டு திமிங்கிலத்தை பிடித்த ஆண்டவர்.. தளபதி 67ல் வச்சாங்க பாரு ட்விஸ்ட்

தற்போது சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி உள்ளதாகவும், ஓரிரு நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று கமலஹாசனுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் கமலஹாசன் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது சந்தேகம்தான்.

ஏற்கனவே ஓடிடி தளத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிம்பு, கமலுக்கு பதில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி நடந்தால் நிச்சயம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங் பயங்கர அடி வாங்கும்.

Also Read: ரத்தம் வராமல் வார்த்தைகளால் அடிக்க போகும் கமல்.. ரணகளமாகும் பிக் பாஸ் வீடு

அத்துடன் கமல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் KH 233 மற்றும் மணிரத்தினம் இயக்கத்தில் KH 234 ஆகிய படங்களிலும் நடிக்க உள்ளார். ஆகையால் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் கமலஹாசன் அடுத்தடுத்த படங்களும் தள்ளிப் போக வாய்ப்புள்ளது.

ஏனெனில் அவரது உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் அடுத்த படங்களுக்கு கால இடைவெளி வேண்டும். ஆகையால் கமலஹாசனின் இந்த நிலையை கேட்டதும் மொத்த தயாரிப்பாளர்கள் தலையில் இடியை இறக்கியது போல் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Also Read: கமலால் 5 கோடியை இழந்த விசுவாசி.. ஆனாலும் வெறுத்து ஒதுக்க இப்படி ஒரு காரணமா?

Trending News