திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கமல், ரஜினி எல்லாம் ஹீரோவே இல்ல.. ஸ்டார் நடிகருக்கு சப்போர்ட் செய்து வாயை புண்ணாக்கிய தேவயானியின் புருஷன்

Actor Rajini Kamal Controversy: 80களில் இருந்து இப்போது வரை தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இரண்டு ஜாம்பவான்கள் யார் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் தான். இவர்கள் இருவருக்கும் தமிழகத்தில் தனித்தனியே எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் இருக்கிறது.

இருப்பினும் 90களில் ஹிட் படங்களை கொடுத்த தேவயானியின் புருஷன் இயக்குனர் ராஜகுமாரன் கமல், ரஜினி எல்லாம் பெரிய ஹீரோவே இல்லை.என்னதான் கமலஹாசன் நான்கு வயதில் இருந்து சினிமாவில் கலக்கி கொண்டு இருந்தாலும், தலைசிறந்த நடிகர் யார் கமலா? சரத்குமாரா? என்ற கேள்வி வந்தால் சரத்குமார் தான் என சொல்வேன் என்று இயக்குனர் ராஜகுமாரன் தேவை இல்லாமல் பேசி இப்போது வாங்கி கட்டி கொள்கிறார்.

Also Read: 4 இல்ல 40 என்றாலும் நோ தான்.. சூப்பர் ஸ்டாருடன் நடிக்க மறுத்த நடிகை

கமல் நடிப்பது எல்லா படங்களிலும் வெளிப்படையாக தெரியும். ஆனால் சரத்குமார் எந்த படத்தில் நடித்தார் என குறிப்பிட்டு சொல்லவே முடியாது. அந்த அளவிற்கு எதார்த்தமாக அந்த படத்துடன் ரசிகர்களை பயணிக்க வைத்திருப்பார். சரத்குமார் ஒரு அற்புதமான நடிகர்,.

அவருடன் ஒப்பிட்டுப் பேசுவதற்கு தமிழ் சினிமாவில் ஆளே இல்லை. விஜய், அஜித், விக்ரமை விட வயதில் மட்டுமல்ல நடிப்பு திறமையிலும் சரத்குமார் தான் பெஸ்ட் என்று சமீபத்திய பேட்டியில் தேவயானியின் கணவர் இயக்குனர் ராஜகுமாரன் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறார்.

Also Read: உயரப் பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது.. விஜய்யை பார்த்து சிவகார்த்திகேயன் போட்ட பிளான்

இந்த பேட்டியை கேட்ட சூப்பர் ஸ்டார், உலக நாயகன் மற்றும் தல, தளபதி ரசிகர்களும் கொந்தளிக்கின்றனர். அத்துடன் இயக்குனர் ராஜகுமரன் தொடர்ந்து நான்கு படங்களில் தேவயானியை கதாநாயகியாக நடிக்க வைத்து, அவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தேவயானியை கரெக்ட் பண்றதுக்கு சரத்குமார் மாமா வேலை பார்த்தாரா, அதனால் தான் அவரை இப்படியெல்லாம் தூக்கி வைத்து பேசுகிறாயா என்று நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் இயக்குனர் ராஜகுமாரனின் இந்த பேட்டியை கேட்ட பின்பு வறுத்தெடுக்கின்றனர். அத்துடன் ரஜினி, கமலை விட சரத்குமார் தலைசிறந்த நடிகர் என சொன்னது பலராலும் ஜீரணிக்க முடியாமல் காட்டமான கமெண்ட்களை பதிவிடுகின்றனர்.

Also Read: சந்தில் சிந்து பாடிய சிவகார்த்திகேயன்.. பிசினஸ் வேற, நட்பு வேறன்னு மறுத்த கமல்

Trending News