வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மதுவால் வாழ்க்கை இழந்த நடிகை.. நடை பிணமாக மாறிட்டேன் என புலம்பிய கமல், ரஜினி பட ஹீரோயின்

Kamal – Rajini: சினிமாவில் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த ஒரு சில ஹீரோயின்கள் திடீரென காணாமல் போய்விடுவார்கள். ரசிகர்களும் அப்படி ஒரு நடிகை இருந்ததையே சில காலத்தில் மறந்து விடுவார்கள். அப்படி அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து, மிகப்பெரிய ஹீரோக்களுடன் நடித்த நடிகை ஒருவர் சினிமாவில் இருந்து திடீரென காணாமல் போயிருந்தார்.

வழக்கமான நடிகைகள் போல ஏதாவது ஒரு தொழில் அதிபர் அல்லது தயாரிப்பாளரை திருமணம் செய்து செட்டில் ஆகி இருப்பார் இந்த நடிகை என்று நினைத்துக் கொண்டிருந்தபோது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அந்த நடிகை கொடிய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக மீடியாவில் செய்திகள் வெளியாகின. தற்போது அந்த நடிகை தன் வாழ்க்கையில் நடந்ததை பற்றி ரசிகர்களிடம் பேசி இருக்கிறார்.

Also Read:5 வருட காதல் கணவருக்கு அதிரடியாக விவாகரத்து கொடுத்த நடிகை.. அப்போ அது வதந்தி இல்ல உண்மைதானா.!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், முதல் படமே இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், அடுத்தடுத்து பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் ஹீரோயினாக நடித்த மனிஷா கொய்ராலா தான் அந்த நடிகை. கமலுடன் இந்தியன், ரஜினியுடன் பாபா போன்ற படங்களில் ஜோடியாக நடித்திருந்தார். இவர் நடித்த முதல்வன் திரைப்படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய அடையாளமாக இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு இவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி இந்திய சினிமா உலகில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. பல பிரபலங்களும் இவரை நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்து வந்தனர். இப்போது அந்த நோயில் இருந்து மீண்டு வந்த இவர் தான் செய்த தவறை பற்றி பேசி இருக்கிறார்.

Also Read:இரவு முழுக்க தூங்க விடாமல் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்ன மாஸ்டர்.. கப்பு தாங்காமல் படப்பிடிப்பில் அசிங்கப்பட்ட நடிகை

திருமணம் ஆகி இரண்டே வருடத்தில் கணவனை பிரிந்த இவர் விவாகரத்தும் பெற்றிருக்கிறார். அதன் பின்னர் மன உளைச்சலால் மது குடிக்க ஆரம்பித்து அதற்கே அடிமையாகவும் ஆகிவிட்டாராம். இதனால் பல சினிமா வாய்ப்புகளை இழந்ததோடு, தன்னை சுற்றி இருந்த உறவுகளையும் இழந்துவிட்டதாக சொல்லி இருக்கிறார். புற்றுநோயிலிருந்து மீண்டு வரவே தான் படாத பாடு பட்டதாகவும் பேசி இருக்கிறார்.

புற்றுநோயால் தான் இழந்ததை விட மது பழக்கத்தால் இழந்தவை தான் அதிகம். இன்று எல்லாவற்றையும் இழந்து விட்டு நடை பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எந்த ஒரு பிரச்சனைக்கும் குடிப்பழக்கம் என்பது தீர்வாகாது என்று ரசிகர்களிடம் மனம் உருகி பேசி இருக்கிறார் மனிஷா கொய்ராலா.

Also Read:சைக்கோ போல் கடித்து பிராண்டிய காதலன்.. அந்தரங்க தொல்லையால் தற்கொலைக்கு முயன்ற நடிகை

Trending News