Rajini-Kamal: நட்புக்கு உதாரணமே கர்ணன், துரியோதனன் தான். ஆனால் அவர்களையே ஓவர் டேக் செய்திருக்கிறது கமல், ரஜினியின் ஆத்மார்த்தமான நட்பு. இதை பல வருடங்களாக நாம் பார்த்து வந்தாலும் இப்போது ஆண்டவர் ஒரு மேடையில் பளிச்சென பேசி டாப் ஹீரோக்களுக்கு குட்டு வைத்திருப்பது வைரலாகி வருகிறது.
அதாவது சைமா 2023 விருது வழங்கும் விழாவில் விக்ரம் படத்துக்காக கமலுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. அப்போது மேடையில் பேசிய அவர் தனக்கும் ரஜினிக்கும் இருக்கும் நட்பை பற்றி பேசி அந்த இடத்தையே கைதட்டலால் அதிர வைத்தார்.
Also read: இழுபறியில் லைக்காவின் விடாமுயற்சி.. பெரும் தலைவலியால் சூப்பர் ஸ்டாரிடம் தஞ்சம்
அவர் கூறியதாவது, தலைவர் 171 படத்தை லோகேஷ் இயக்குவது பற்றி எல்லோரும் என்னிடம் விசாரிக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் எங்களுடைய நட்பை பற்றி புரிந்தது அவ்வளவுதான். பல வருடங்களுக்கு முன்பு நடந்த கமல் 50 விழாவில் கூட இதைப்பற்றி நான் கூறியிருந்தேன்.
நானும் ரஜினியும் நட்புடன் இருப்பது போன்று இதற்கு முன்பு யாரும் இருந்ததே கிடையாது என்று கூறினேன். அடுத்த தலைமுறை ஹீரோக்களை பற்றி நான் ஏன் கூறவில்லை என்றால் அவர்கள் எங்களை மாதிரி இருக்க வேண்டும். எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருக்கிறது, ஆனால் துரோகம் கிடையாது.
Also read: மகளுக்கே ரஜினி வைத்த பெரிய செக்.. தலைவர் போட்ட கண்டிஷனால் ஆடிப் போன லைக்கா
என் ரசிகன் என்னுடைய நண்பரின் படத்தை இயக்குவது எனக்கு பெருமை தானே. இந்த விஷயத்தை நாங்கள் புரிந்து கொண்ட அளவு யாரும் புரிந்து கொள்ளவில்லை. விளையாட்டு என்று வந்துவிட்டால் நாங்கள் போட்டி போடுவோம். ஆனால் ஒருவரை ஒருவர் தடுக்கி விட்டு வெற்றி பெற மாட்டோம். இது நாங்களே எடுத்த முடிவு.
சிறு வயதிலேயே எங்களுக்கு இருந்த இந்த அறிவுக்கு நாங்கள் ஒருவருக்கொருவர் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம் என்று பெருமையுடன், கர்வத்துடனும் கூறினார். அது ஒரு விதத்தில் உண்மையும் கூட. அந்த வகையில் நட்புக்கு இலக்கணமாக திகழும் ரஜினி கமல் இன்றைய தலைமுறைக்கு மிகப்பெரும் எடுத்துக்காட்டாக இருக்கின்றனர்.
Also read: எகிறிப்போன லால் சலாம் பட்ஜெட்.. மகள் படம் என்று பாராமல் சம்பளத்தில் இலாப கணக்கு தீட்டிய ரஜினி