திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கமலை உயிருக்குயிராய் காதலித்த நடிகை.. கெஞ்சி, கதறியும் ஏற்காத உலகநாயகன்

கமலுக்கும் காதலுக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. அதேபோன்று அவருடைய வாழ்வில் ஏகப்பட்ட காதல் பக்கங்களும் இருக்கிறது. இது திரையுலகில் பலருக்கும் தெரியும். இப்படிப்பட்ட உலகநாயகன் தன்னையே சுற்றி சுற்றி வந்து காதலை சொன்ன ஒரு நடிகையின் விண்ணப்பத்தை மட்டும் ஏற்கவில்லை என்பது சற்றே ஆச்சரியமான விஷயம் தான்.

அந்த வகையில் தன்னுடைய அழகாலும், அபரிமிதமான நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் தான் நடிகை ஸ்ரீவித்யா. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை அப்படியே தத்ரூபமாக நடிக்கும் திறமை இவருக்கு உண்டு. அப்படிப்பட்ட இவர் கமலை உயிருக்கு உயிராக காதலித்திருக்கிறார்.

Also read: கமல் ஹீரோவாக இவர்தான் முக்கிய காரணம்.. இறப்பிற்கு வராமல் போன அதிர்ச்சி

ஆனால் அவர் ஸ்ரீவித்யாவின் காதலை நிராகரித்திருக்கிறார். பல நடிகைகளை விரும்பிய கமல் இந்த நடிகையின் காதலை மட்டும் ஏன் ஏற்கவில்லை என்பது கொஞ்சம் வியப்பான விஷயமாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்த காலகட்டத்தில் கமல் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்திருக்கிறார்.

மேலும் சினிமாவில் எதையாவது சாதிக்க வேண்டும், புகழின் உச்சியை அடைய வேண்டும் என அவர் துடிதுடித்துக் கொண்டிருந்தார். அதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார். அது மட்டுமல்லாமல் இரவு, பகல் பாராமல் அனைத்து மொழிகளிலும் நடித்து தன்னை பிசியாகவே வைத்துக் கொண்டாராம்.

Also read: இந்தியன்-2 வில் சுகன்யா வேண்டவே வேண்டாம்.. பெரிய தலையால் விரட்டப்பட்ட ஷங்கர்

அதனாலேயே இந்த காதலை அவர் நிராகரித்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் வெளியில் சொல்லப்படாத சில மர்மங்களும் இந்த காதலில் இருக்கிறது. அந்த வகையில் ஸ்ரீவித்யா கெஞ்சி கதறியும் கூட கமல் இந்த காதலை ஏற்க மறுத்து இருக்கிறார். அதன் பிறகு அவருக்கு வாணி கணபதியுடன் திருமணமும் நடந்திருக்கிறது.

இதைப் பார்த்த ஸ்ரீவித்யா மிகவும் மனமுடைந்து போயிருக்கிறார். பின்னர் அவரும் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமண வாழ்வு ஏகப்பட்ட சிக்கல் நிறைந்ததாக இருந்திருக்கிறது. மேலும் இரண்டு வருடங்களிலேயே அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அந்த வகையில் கமல் தன் சினிமா வளர்ச்சிக்காக ஒரு காதலை மறுத்தார் என்பது பலருக்கும் புதிய தகவலாக இருக்கிறது.

Also read: கமலுக்கும் 4, சுருதிஹாசனுக்கும் 4.. போட்டி போட்டு லிவிங் டு காதல் செய்யும் அப்பாவும், பொண்ணும்

Trending News