Indian 2 Twitter Review: கமல், ஷங்கர், ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் 28 வருடங்களுக்கு முன்பு இந்தியன் வெளியானது. தாறுமாறு ஹிட் அடித்த படத்தை தொடர்ந்து தற்போது இந்தியன் 2, 7 வருட போராட்டத்திற்கு பின் ரிலீஸ் ஆகி இருக்கிறது.
இதற்காக கடந்த சில வாரங்களாகவே பட குழுவினர் பயங்கர பிரமோஷனில் ஈடுபட்டிருந்தனர். அதன் பலனாக டிக்கெட் முன்பதிவு இதுவரை இல்லாத அளவுக்கு சாதனை படைத்தது.
இப்படி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தி இருந்த இப்படம் தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சி ஆரம்பித்தது. ஆனால் மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் படத்தை பார்த்த ரசிகர்கள் இப்போது சோஷியல் மீடியாவில் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.
அதில் வழக்கம் போல கமல் மிரட்டி விட்டார் என்பதுதான் அனைவரின் கருத்தாக இருக்கிறது. ஆனால் முதல் பாகத்தில் இருக்கும் அளவுக்கு கிரியேட்டிவிட்டி, சர்ப்ரைஸ் இதில் குறைவாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இந்தியன் 2 ட்விட்டர் விமர்சனம்
அதேபோல் ஷங்கரின் திரைக்கதை இன்னும் பழைய பாணியில் இருப்பதாகவும் இக்காலத்திற்கு ஏற்றவாறு இன்னும் சில விஷயங்களை கொடுத்திருந்தால் நல்லா இருக்கும் எனவும் ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதே சமயம் அனிருத் ஸ்கோர் செய்யும் அளவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஆனால் படம் முழுவதும் கொட்டிக் கிடக்கும் பிரம்மாண்டம் தயாரிப்பாளர் காசை எவ்வளவு வாரி இறைத்திருக்கிறார் என்பதை சொல்கிறது.
முதல் பாதி ஓகே ரகமாக இருந்தாலும் இரண்டாம் பாதி கொஞ்சம் சலிப்பு தட்டுவதாக ரசிகர்கள் கூறுகின்றனர். ஆக மொத்தத்தில் இந்தியன் 3 ட்ரெய்லர் இறுதியில் காட்டப்படுவது ஆடியன்சை கொண்டாட வைத்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் இப்படத்தை விட இந்தியன் 3 செம ட்ரீட்டாக இருக்கும் என தெரிகிறது.
போராட்டங்களைக் கடந்து வெளியான இந்தியன் 2
- வாழ்வா, சாவா போராட்டத்தில் லைக்கா.. காப்பாற்றுமா இந்தியன் 2.?
- கமல், சித்தார்த்தால் தலையை பிச்சிக்கும் லைக்கா
- தடைகளைத் தாண்டி இந்தியன் 2 உடன் மோதுமா டீன்ஸ்.?