Indian 2 Trailer: கடந்த ஏழு வருடங்களாக கமல் ரசிகர்கள் இந்த ஒரு நாளுக்காக தான் காத்திருக்கின்றனர். சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் நடிப்பில் உருவான இந்தியன் 2 ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
பல போராட்டங்களுக்குப் பிறகு வரும் ஜூலை 12ஆம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த போஸ்டர் அனைவரையும் கவர்ந்த நிலையில் தற்போது ட்ரெய்லர் வேற லெவல் பிரம்மாண்டத்துடன் உள்ளது.
அதன்படி இதன் ஆரம்பத்திலேயே படிப்புக்கு ஏத்த வேலையில்ல, வேலைக்கேத்த சம்பளம் இல்ல, கட்ற வரிக்கு ஏத்த வசதி இல்ல என்ற வசனத்தோடு தொடங்குகிறது. அதை தொடர்ந்து லஞ்சம், ஊழல் என தற்போதைய நிலையை காட்டுகின்றனர்.
அதைத்தொடர்ந்து ஊழலுக்கு எதிரானவர்களாக சித்தார்த், பிரியா பவானி சங்கர் ஆகியோர் வருகின்றனர். அதில் சித்தார்த் சிஸ்டம் சரி இல்லன்னு வாய் கிழிய பேசினா பத்தாது என சைடு கேப்பில் ரஜினியையும் வாரி இருக்கின்றார்.
வேட்டைக்கு தயாராகும் கமல்
அதை அடுத்து இந்தியன் தாத்தா பல கெட்டப்புகளில் மிரட்டுகிறார். அதிலும் இது இரண்டாவது சுதந்திரப் போர், காந்தி வழியில நீங்க போங்க நேதாஜி வழியில நான் போறேன் என்று சொல்லும் வசனம் பட்டையை கிளப்புகிறது.
மேலும் வில்லனாக வரும் எஸ் ஜே சூர்யா உடல் நிறைய தங்கத்தால் அலங்கரித்துக் கொண்டு தக தக என மின்னுகிறார். நிச்சயம் இவருடைய வில்லத்தனமான நடிப்பு இதில் பல மடங்காக இருக்கும் என தெரிகிறது.
அதேபோல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சொல்வது போல கமல் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, டாம் அண்ட் ஜெர்ரி ஆட்டம் ஆரம்பிச்சிடுச்சு என சொல்லி மியாவ் என சொல்லும் காட்சி அட்டகாசமாக இருக்கிறது. எந்திரன் படத்தில் சிட்டி ரோபோ மே என ஆட்டுக்குட்டி போல் சொல்லும் காட்சி நினைவுக்கு வருகிறது.
இப்படியாக மிரட்டல் பின்னணி இசை, உலக நாயகனின் அசத்தல் நடிப்பு என ஆரவாரமாக இந்தியன் 2 ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. இதை பார்க்கும் போதே நிச்சயம் வசூலில் பெரிய அளவில் சாதனை செய்யும் என்றும் கணிக்க முடிகிறது.
தடைகளைத் தாண்டி வெளியான இந்தியன் 2 ட்ரெய்லர்
- லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரும் சேனாபதி
- Indian 2: கமலையே பயமுறுத்தும் அக்கடதேச ஹீரோ
- Kamal: நேரலையில் இந்தியன் 3 பற்றி அப்டேட் கொடுத்த கமல்