வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

முதல்ல ஆம்பளைங்க கற்புக்கு கேரண்டி கொடுங்க ஆண்டவரே.! நாராசமாக பேசும் பிக்பாஸ் அராத்திகள்

Biggboss 7-Kamal: கற்புங்கிறது ஆண், பெண் இருவருக்கும் சமம் தான் என்று இப்போது பிக்பாஸ் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கதறி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் வீட்டுக்குள் நடக்கும் அராஜகம் தான். அந்த அளவுக்கு ஆண்களின் பாதுகாப்புக்கு அங்கு பங்கம் ஏற்பட்டு இருக்கிறது.

கடந்த வாரம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பிரதீப்பை அவர் தரப்பு நியாயத்தை கூட கேட்காமல் அலேக்காக வெளியில் தூக்கி போட்டார் ஆண்டவர். அதற்கு பல எதிர்ப்புகள் இப்போது வரை கிளம்பி கொண்டிருக்கிறது. இந்த வாரம் கமல் இதற்கு விளக்கம் கொடுத்தால் தான் இந்த தீ அணையும் அளவுக்கு கொழுந்து விட்டு எரிகிறது.

இது ஒரு புறம் இருந்தாலும் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று போர்க்கொடி தூக்கிய அராத்திகள் தற்போது வீட்டுக்குள் எல்லை மீறி பேசுவது கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. அதிலும் மாயா, பூர்ணிமா இருவரும் அராஜகத்தின் எல்லைக்கு சென்றுள்ளனர். அதாவது நேற்றைய லைவ் நிகழ்வில் பிராவோ குறித்து பூர்ணிமா பேசியது அருவருக்கத் தக்க வகையில் இருந்தது.

Also read: 80% வாக்குகளை கைப்பற்றிய போட்டியாளர்.. அவமானப்பட்டு பிக்பாஸை விட்டு வெளியேறப் போவது இவர் தான்

மாயா பிராவோவை பார்த்து ஒரு கமெண்ட் அடித்தார். உடனே பூர்ணிமா இன்று இரவு உங்களுக்கு மாயா வேண்டுமா என்று கேட்டு கிண்டலாக சிரித்தார். இந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அவர்கள் இருவரையும் கழுவி ஊற்றாத குறையாக கேவலப்படுத்தி வருகின்றனர்.

முதல்ல உங்க கிட்ட இருந்து தான் ஆம்பளைங்கள காப்பாத்தணும். இதுல உங்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்ற கருத்துக்கள் இப்போது வேகமாக பரவி வருகிறது. உண்மையில் இவர்கள் எல்லாம் பெண்கள் தானா. ஒரு நேஷனல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்வில் இதுபோன்று பேசுவது தப்பு என்று அவர்களுக்கு தெரியவில்லையா.

இதையெல்லாம் குழந்தைகள் பார்த்து கெட்டுப் போக மாட்டார்களா? ஏன் கமல் சார் இதை தட்டிக் கேட்கவில்லை. ‘அப்ப ஆம்பளைங்க கற்புக்கு பாதுகாப்பு வேண்டாமா’. “எங்களுக்கும் மானம் இருக்கு” என ஆண்கள் அனைவரும் ஒன்று திரண்டு உலகநாயகனிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இப்படி ரணகளமாக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியை பார்த்து ஆண்டவர் இப்போது நொந்து போய் இருப்பார். இருந்தாலும் வார இறுதி நாளில் அவர் நம்மை சந்தித்து தானே ஆக வேண்டும்.

Also read: மாயா ஒரு பஜாரி, ஆம்பளைங்களே அவ பேசுறதை பார்த்து ஓடுவாங்க.! கேவலப்படுத்திய யுகேந்திரன்

Trending News