வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பிக் பாஸ் ஸ்கிரிப்ட் ரைட்டருக்கு கமல் மேல் அப்படி என்னதான் காண்டு?. மனப்பாடம் பண்ணி மாட்டிக்கொண்ட ஆண்டவர்

BB7 Tamil: உலக நாயகன் கமலஹாசன் கடந்த ஏழு வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த ஏழாவது சீசனில் அவருடைய பெயர் ரொம்பவும் டேமேஜ் ஆகி கொண்டிருக்கிறது. விஜய் டிவி ஒட்டுமொத்தமாக இந்த சீசன் மூலம் கமலுக்கு ஆப்பு வைத்து விட்டதாக சினிமா ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

இந்த சீசனின் சென்சேஷனல் போட்டியாளராக இருந்த பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்ததிலிருந்து கமலின் பெயர் ரொம்பவும் அடி வாங்க ஆரம்பித்துவிட்டது. அதிலும் மாயா மற்றும் பூர்ணிமாவை எந்த கேள்வியும் கேட்காமல், அப்பாவி போட்டியாளர்களை வாராவாரம் வந்து தூக்கி போட்டு பந்தாடிக் கொண்டிருந்ததால் கமல் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டார்.

மொத்தத்தில் கமலஹாசனுக்கு இந்த சீசன் போட்டியாளர்கள் யார் மீதும் காண்டு இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஸ்கிரிப்ட் எழுதும் ரைட்டருக்குத்தான் கமல் மீது காண்டு என நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். கமல் என்ன பேச வேண்டும் என்பதை இஷ்டத்துக்கு எழுதிக் கொடுத்து, அவரை பேச வைத்து அடிமேல் அடி வாங்க வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Also Read:43% ஓட்டுக்களை வாரி சுருட்டிய போட்டியாளர்.. பிக்பாஸ் ஓட்டிங்கில் நம்பர் ஒன் இவர்தான்

கமல் போன்ற ஒரு கலைஞனுக்கு 10 பக்கத்திற்கு வசனம் மனப்பாடம் பண்ணி பேசுவது என்பது கைவந்த கலை. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அது சரி வருமா என்று யோசித்தால் சுத்தமாக செட் ஆகாது. கடந்த வாரம் மணி மற்றும் தினேஷ் உண்மையான நிறம் வெளிவரும் என்று பேசி இருந்ததை, கமல் தேவையில்லாமல் ட்விஸ்ட் பண்ணி அவர்களை ரொம்ப கடிந்து கொண்டார்.

வசமாக சிக்கிக்கொண்ட கமல்

ஆனால் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் சாயம் வெளுத்து போச்சு என்ற வார்த்தையை கமல் பேசியிருக்கிறார். கமல் தமிழில் சொன்னதை தான் கடந்த வாரம் மணி மற்றும் தினேஷ் ஆங்கிலத்தில் சொல்லியிருந்தார்கள். அவர்களை வேறு மாதிரி திசை திருப்பி விட்ட ஆண்டவர் இப்போது அதே வார்த்தையை உபயோகப்படுத்தி இருக்கிறார்.

உண்மையில் கமலுக்கு பிக் பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என்பதும் தெரியவில்லை, தான் என்ன பேசுகிறோம் என்பது புரியவில்லை. என்ன எழுதிக் கொடுக்கிறார்களோ அதை பக்காவாக பேசுகிறார். எப்படி போனாலும் மாயா மனது புண்படக் கூடாது என்பதில் மட்டும் ஆண்டவர் ரொம்பவும் உறுதியாக இருப்பது போல் தான் தெரிகிறது.

Also Read:பூர்ணிமாவை வைத்து புது வியூகம் போடும் அர்ச்சனா.. இரண்டாக உடையும் Bully Gang

Trending News