Coolie: ஒரு காலகட்டத்தில் போட்டியாளர்களாக இருந்து பின் என் வழி தனி வழி என பிரிந்தவர்கள் தான் ரஜினி மற்றும் கமல்.
அது மட்டும் இல்லாமல் ரஜினியிடம் யாராலும் வாலாட்ட முடியாது என சமீபத்தில் ஜெயிலர் படத்தின் வசூல் மிரட்டி இருந்தது.
இந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு ரஜினியிடமே கமல் பவுசு காட்டும் அளவுக்கு சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
ரஜினியிடமே பவுசு காட்டும் கமல்
தமிழ் சினிமாவில் மாஸ் கூடி போய் இருக்கிறார் லோகேஷ். அவருடன் ரஜினி இணைந்திருப்பதால் கூலி படத்திற்கு திருவிழா வரவேற்பு தான்.
அதே நேரத்தில் 33 வருடங்களுக்குப் பிறகு மணிரத்தினம் மற்றும் கமல் இணைந்திருப்பதால் தக் லைஃப் படமும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
படத்தின் மற்றும் ஒரு பாசிட்டிவ் சிம்பு இணைந்திருப்பது. இந்த நிலையில் தான் தற்போது இந்த இரண்டு படங்களின் சாட்டிலைட் வியாபார தகவல் வெளியில் வந்திருக்கிறது.
ரஜினியின் கூலி அமேசான் நிறுவனத்தில் 120 கோடிக்கு விற்பனையாக இருக்கும் நிலையில், கமலின் தக் லைஃப் 149.7 கோடிக்கு நெட்லிக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டு இருக்கிறது.
சாட்டிலைட் வியாபாரத்தில் ரஜினியை கமல் மிஞ்சி இருப்பதற்கு காரணம் மணிரத்தினம் மற்றும் சிம்புவுடன் அவர் கைகோர்த்து இருப்பது தான் என்றும் பேசப்படுகிறது.