நடிகர் கமல்ஹாசன் 10 தோற்றத்தில் நடித்த திரைப்படம் தசாவதாரம். இதில் அவர் வெளிநாட்டவர், சைனீஸ், வயதான பாட்டி போன்ற மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து நம்மை பிரமிக்க வைத்தார்.
இந்த கதாபாத்திரங்களின் மேக்கப், முக அமைப்பு மற்றும் குரல் என அனைத்தையும் மாற்றி நடித்திருப்பார். இது அனைவராலும் ரசிக்கப்பட்டு பாராட்டைப் பெற்றது. மேலும் இத்திரைப்படத்திற்காக அவர் சிறந்த நடிகர், வில்லன், கதாசிரியர் போன்ற பல விருதுகளை பெற்றார்.
இந்த திரைப்படத்திற்கு முன்பாகவே நடிகர் கமல் ஒரு திரைப்படத்தில் எட்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 1981 இல் வெளிவந்த எல்லாம் இன்பமயம் என்ற படம்தான் அது. இந்த படத்தில் கமல் வேலை தேடி சென்னைக்கு வருவார். அங்கு முதலாளியாக இருக்கும் ஜெய்சங்கர் இடம் வேலைக்கு சேருவார்.
முதலாளிக்கு விசுவாசமாக இருக்கும் கமலை ஜெய்சங்கர் ஏமாற்றி சிறையில் தள்ளுவார். முதலாளியை நம்பி ஏமாந்த கமல் அவரை பழிவாங்க முடிவெடுப்பார். இதற்காக அவர் பல மாறுபட்ட தோற்றத்தில் நடித்து ஏமாற்றுவார்.
இதில் கமல் வயதான தோற்றம், டான்சர், ரவுடி போன்ற 8 கேரக்டர்களில் வருவார். இப்படத்தில் கமலுடன் இணைந்து ஒய் ஜி மகேந்திரன், மாதவி, சுமன் போன்றோர் நடித்துள்ளனர். இயக்குனர் ஜி என் ரங்கராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் கமல் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் போன்ற திரைப்படங்களிலும் இரண்டிற்கும் மேற்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.