வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சிம்புவை தூக்கிவிட படாத பாடுபடும் கமல்.. செஞ்ச சத்தியத்தை காப்பாற்றும் ஆண்டவர்

Actor Simbu: சிம்பு என்றாலே சர்ச்சை கூறியவர் என்ற நிலைமை தற்போது மாறிக்கொண்டே வருகிறது. குறிப்பிட்ட வயதை தாண்டும் போது பக்குவம் வந்து விடும் என்பதற்கு ஏற்ப, இளம் வயதில் பல சேட்டைகளை செய்து வந்த சிம்பு தற்போது நடிப்பு விஷயத்தில் பொறுப்பாக மாறிவிட்டார். அதனால் என்னமோ இவர் நடித்துவரும் படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அந்த வகையில் இவருடைய வெற்றி படத்தை தொடர்ந்து தற்போது சிம்பு 48 வது படத்தில் கமிட்டாகி விட்டார். இப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார். அத்துடன் இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

Also read: மூன்றே நாள் படப்பிடிப்பு, சமந்தாவை மாற்றி ஐயர் நடிகையை சுத்தலில் விட்ட சிம்பு.. இப்ப புலம்பி என்னத்துக்கு

மேலும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க இருக்கிறது. கமல் எப்படியாவது இப்படத்தின் மூலம் சிம்புவிற்கும், தனது தயாரிப்பாளர் நிறுவனத்திற்கும் பெரிய லாபத்தை பார்த்து விட வேண்டும் என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து கவனமாக செதுக்கிக் கொண்டு வருகிறார்.

அத்துடன் இப்படத்தின் மூலம் சிம்புவின் கேரியரை வேற லெவல்ல கொண்டு போய் விட வேண்டும் என்று படாத பாடு பட்டு வருகிறார். ஏற்கனவே கமலுக்கு டிஆர் என்றால் அந்த அளவிற்கு ஒத்தே போகாத ஒரு விஷயம். ஆனாலும் டிஆர் ஐ பிடிக்கவில்லை என்றாலும் சிம்புவிற்கு இப்படத்தின் மூலம் வெற்றியை கொடுப்பேன் என்று சத்தியம் செய்து இருக்கிறார். இந்த சத்தியத்தை காப்பாற்றுவதற்காக கடினமாக உழைத்து வருகிறார்.

Also read: ஓஹோ கொரியன் படங்களை காப்பியடிப்பதன் சங்கதி இதுதானா.? கமல் படமே சுட்ட மூவி தான்

இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையை இறக்க வேண்டும் என்பதில் களம் இறங்கி அதற்கான வேலைகளையும் பார்த்து வருகிறார். ஆனாலும் அங்கே இவர் கேட்ட நடிகைகள் அனைவரும் அதிக அளவில் டிமான்ட் செய்து வருவதால், தமிழிலும் சில நடிகைகளுக்கு வலை வீசி கொண்டு வருகிறார்.

மேலும் சிம்புக்கு தேவையான உடற்பயிற்சி அனைத்தும் வெளிநாடுகளில் சென்று பயிற்சி எடுப்பதற்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து இருக்கிறார். இந்த படத்தின் மூலம் சிம்புவை எப்படியாவது தூக்கி விட வேண்டும் என்று முனைப்பில் கமல் பல வேலைகளில் இறங்கி ஒவ்வொன்றையும் செய்து வருகிறார்.

Also read: வார்த்தையே இல்லாமல் நவரசத்தையும் கொட்டி ஸ்கோர் செய்த கமல்.. ஒரே ஷாட்டில் கொடுத்த 12 எக்ஸ்பிரஷன்ஸ்

Trending News