வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

கேஜிஎஃப் இயக்குனருடன் திடீர் சந்திப்பு.. பிரபாஸை ஒரு கை பார்க்க தயாரான ஆண்டவர்

Actor Kamal: உலக நாயகன் விக்ரமுக்கு முன்னதாக நாலு வருடம் பிரேக் எடுத்த நிலையில் இப்போது அதையும் ஈடுகட்ட வேண்டும் என்பதற்காக தீயாய் வேலை செய்த வருகிறார்.  ஒரு பக்கம் தயாரிப்பின் மூலம் கல்லா கட்டி வரும் நிலையில் ஹீரோவாகவும் லயன் அப்பில் நிறைய படங்களில் வைத்திருக்கிறார்.

அந்த வகையில் வினோத்துடன் புதிய படம் ஒன்றில் இணைந்துள்ளார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ப்ராஜெக்ட் கே படத்தில் கமல் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 150 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம். இதில் அமிதாப் பச்சன் போன்ற முன்னணி பிரபலங்களும் நடிக்கிறார்கள்.

Also Read : ரஜினி, கமலை டீலில் விட்ட லோகேஷ்.. இரண்டாம் பாகத்துடன் களமிறங்கும் அடுத்த கூட்டணி

இந்நிலையில் கமலை திடீரென கே ஜி எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் சந்தித்துள்ளார். இந்த விஷயம் இணையத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது பிரபாஸின் சலாம் படத்தை பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இந்த படம் இப்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இவரும் தற்போது கைவசம் நிறைய படங்கள் வைத்திருக்கிறார்.

ஆகையால் கமலை வைத்து பிரசாந்த் நீல் இப்போதைக்கு படம் எடுப்பது சாத்தியமில்லா ஒன்று. சந்திப்புக்கு ஒரு காரணம் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அதாவது சலார் படத்தின் ரிலீஸுக்கு பிறகு இரண்டாம் பாகத்தை பிரசாந்த் நீல் எடுக்க உள்ளார். இந்தப் படத்திலும் பிரபாஸுக்கு வில்லனாக கமலை நடிக்க வைக்க திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.

Also Read : பாலிவுட்டில் பட்டைய கிளப்பும் 5 தமிழ் ஹீரோக்கள்.. கமலின் காலை வாரி விட்ட மோசமான அரசியல்

இவ்வாறு கமல் தொடர்ந்து பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க இருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் வேறு ஒரு விஷயமும் கூறப்பட்டு வருகிறது. அதாவது கே ஜி எஃப் 2 படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் மூன்றாம் பாகத்தை எடுக்கும் திட்டத்தில் பிரசாந்த் நீல் இருக்கிறார்.

ஒருவேளை அந்தப் படத்தில் யாஷ்க்கு வில்லனாக நடிக்க கூட கமலை அணுகி இருக்கலாம் என்று பேசப்பட்ட வருகிறது. ஆனால் எப்படியும் பிரஷாந்த் நீல் படத்தில் கமல் நடிக்க உள்ளார் என்பது உறுதியான விஷயம். மேலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read : தூக்கிவிட்டதற்கே துரோகம் செய்த சிவகார்த்திகேயன்.. எந்த காலத்திலும் அவர் கூட கூட்டணி போட மாட்டேன்

Trending News