செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2025

திடீரென அமெரிக்கா சென்ற கமல்.. தீராத ஆசையில் உலகநாயகன்

Kamal : விக்ரம் படத்திற்கு பிறகு கமலின் படங்கள் வெளியாகததால் ரசிகர்கள் ஏக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு செம விருந்தாக இந்த வருடம் இந்தியன் 2 படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்கள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் அடுத்தாக மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் தங் லைஃப் படத்தின் படப்பிடிப்பு சென்று கொண்டிருக்கிறது.

எப்போதுமே கமலின் படங்களை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு படத்திற்கும் அபரிவிதமான வித்தியாசம் இருக்கும். சினிமாவுக்காக எதையும் செய்ய கமல் தயங்க மாட்டார். அதோடு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் பல புதிய தொழில்நுட்பங்கள் கமலின் படங்கள் மூலமாகத்தான் கிடைத்திருக்கிறது.

இந்த சூழலில் தங் லைஃப் படத்திற்கு நீண்ட தாடி மற்றும் மீசையுடன் கமல் நடிக்க வேண்டுமாம். இப்படத்தின் டைட்டில் வீடியோ இல்லையே அவரது கெட்டப் வித்தியாசமாக இருந்தது. இந்நிலையில் தங் லைஃப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இதை அடுத்து திடீரென கமல் அமெரிக்கா சென்றிருக்கிறாராம்.

Also Read : கமலுடன் கைகோர்க்காத கோலிவுட்டின் 5 முக்கிய புள்ளிகள்.. கமல் கூப்பிட்டும் நோ சொன்ன மார்க் ஆண்டனி

அதாவது கமல் கதர் ஆடையை மேம்படுத்தும் வகையில் தொழில் செய்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட கதர் ஆடையை பற்றி பல விஷயங்களைப் பேசி இருக்கிறார். இதை இன்னும் பிரபலப்படுத்தும் வகையில் கமல் இறங்கி இருக்கிறாராம். அதோடு சினிமாவிலும் இன்னும் நிறைய படிக்க வேண்டுமாம்.

கமல் இன்னும் இரண்டு வாரங்கள் அமெரிக்காவில் தான் இருக்கப் போகிறாராம். சினிமா மீது உள்ள தீராத ஆசையால் தன் சம்பாதித்த பணம் முழுவதையும் சினிமாவில் முதலீடு செய்து வருகிறார். அவருடைய அடுத்தடுத்த படங்களிலும் ரசிகர்கள் எதிர்பார்க்காத பல ஆச்சரியங்கள் காத்திருக்க உள்ளது.

Also Read : நாலு கெட்டபில் மிரட்ட வரும் ரங்கராய நாயக்கன்.. மணிரத்தினத்தை நிம்மதி பெருமூச்சு விட வைத்த கமல்

Trending News