சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

புதுப்பேட்டை படத்தில் கமல் பாடிய பாடல் பற்றி தெரியுமா? வெறித்தனமா பாடிருக்காருப்பா!

காலம் கடந்து கொண்டாடப்பட்ட திரைப்படங்களில் ஒன்று புதுப்பேட்டை. தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் வெளியான புதுப்பேட்டை என்ற கேங்ஸ்டர் திரைப்படம் தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த வருடம் கூட புதுப்பேட்டை திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை வாரி குவித்தது குறிப்பிட வேண்டிய ஒன்று. அதேபோல் செல்வராகவன் இயக்கிய மற்றொரு படமான ஆயிரத்தில் ஒருவன் படமும் ரீ ரிலீஸ் செய்து நன்றாக கல்லா கட்டியது.

இப்படி செல்வராகவன் படங்களை அப்போது புரிந்து கொள்ளாமல் பின்னாட்களில் புரிந்து கொண்டு கொண்டாடுவதை ரசிகர்கள் வழக்கமாக வைத்துள்ளார்கள். புதுப்பேட்டை படத்தில் செல்வராகவனையும் தாண்டி அனைவரையும் கவர்ந்தது யுவன் சங்கர் ராஜாவின் இசைதான்.

கேங்ஸ்டர் படத்திற்கு ஏற்ற தரமான இசையை வழங்கியிருந்தார். மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுப்பேட்டை படத்தில் கமலஹாசன் ஒரு பாடல் பாடியிருப்பது பலருக்கும் தெரியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

நெருப்பு வாயினில் என்ற பாடலை கமலஹாசன் பாடியுள்ளார். புதுப்பேட்டை திரைப்படம் வெளியான சமயத்தில் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இந்த படம் தோல்விப் படம் லிஸ்டில் சேர்ந்தது.

kamal-dhanush-cinemapettai
kamal-dhanush-cinemapettai

ஆனால் அந்த படத்தில் தனுஷ் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த படத்திற்கு பிறகுதான் தனுஷ் ஒரு முழு நடிகனாக வே மாறினார் என செல்வராகவனே பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.

Trending News