Actor Kamalhassan: கடந்த வருடம் வரை கமல் மார்க்கெட் கொஞ்சம் சரிந்து போய் இருந்தது. எப்போது லோகேஷ் உடன் இணைந்தாரோ, அப்பொழுதே கமலுக்கு விடிவு காலம் பிறந்து விட்டது என்றே சொல்லலாம். ஏனென்றால் இவர்கள் கூட்டணியில் வெளிவந்த விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமலுக்கு சினிமாவில் ஏறுமுகமாக ஜாக்பாட் அடித்து விட்டது.
இதனை தொடர்ந்து அனைவரது கவனமும் இவர் மீது திரும்பி விட்டது. மேலும் இப்படத்தை இவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தான் தயாரித்திருந்தது. அந்த வகையில் விக்ரம் படம் மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது. இதை வைத்து தயாரிப்பு நிறுவனத்தையும் பெரிசாக்கி விட வேண்டும் என்று பல வேலைகளில் மும்மரமாக இறங்கிவிட்டார்.
Also read: அடுத்த சார்லி சாப்ளின் இவர்தான்.. நடிப்பை பார்த்து உறைந்து போய் கமல் கொடுத்த பட்டம்
அதனால் தற்போது யாரு வசூல் அளவிலும், விமர்சன ரீதியாகவும் மக்களிடமிருந்து பாராட்டுகளை பெறுகிறாரோ அவர்களை தன்வசம் இழுத்துக் கொண்டார். அதனால் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் இவருடைய 24 ஆவது படத்தை இவர் தான் தயாரிக்கப் போகிறார். கண்டிப்பாக சிவகார்த்திகேயன் படம் வசூலில் தோல்வி கிடையாது.
அதனால் இவருடைய தயாரிப்பு நிறுவனத்தில் லாபம் பெற்றுவிடும். அதேபோல் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் 48வது படத்தையும் கமல் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இதனைத் தொடர்ந்து வாரிசு நடிகர்களையும் டார்கெட் செய்து வருகிறார். இதில் பெரிய இடத்து தூது வேற வந்திருக்கிறது.
சிம்புவைத் தொடர்ந்து ஜெயராம் மகன் காளிதாஸ் நடிக்க இருக்கும் படத்தை கமல் தயாரிக்கப் போகிறார் என்ற தகவல்கள் வெளிவந்திருக்கிறது. அத்துடன் மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் கிட்டத்தட்ட பத்து படங்களில் நடித்து பிரபலம் ஆகி இருக்கிறார். அதனால் அவருடைய படத்தையும் தயாரித்தால் நிச்சயம் கமலுக்கு வெற்றி உண்டாகும்.
இவர்களைத் தொடர்ந்து மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மகன் துல்கர் சல்மான் படத்தையும் தயாரிக்கப் போகிறார். தன் மகன் நடிக்க இருக்கும் படத்தை நீங்கள் தயாரிங்கள் என்று மம்முட்டி கமலிடம் தூது அனுப்பி இருக்கிறார். அந்த வகையில் கமல் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பண மழையில் நனைய போகிறது.
Also read: லோகேஷை பின்னுக்கு தள்ள ஷங்கர் எடுக்கப் போகும் ஆயுதம்.. ரஜினி, கமல் கூட்டணியில் புது முயற்சி