கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் அன்றே கனித்த சூர்யா என்ற வாசகத்துடன் அவரது படங்களில் இடம்பெற்ற காட்சிகள் உண்மையில் நடைபெறுவது போன்று சித்தரித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.
ஆனால் அவருக்கு எல்லாம் முன்னோடி கமலஹாசன் என்பதை எப்படி கவனிக்கத் தவறினார்கள் என்பதுதான் வேதனையாக உள்ளது. கமல்ஹாசன் தன்னுடைய திரைப்படங்களில் சொன்ன விஷயங்களில் மூன்று நிகழ்வுகள் உலகையே உலுக்கியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது.
அதில் ஒன்று சுனாமி. சுனாமி வந்த பிறகுதான் தசாவதாரம் படத்தில் அந்த காட்சிகள் பயன்படுத்தப்பட்டது என்று கூட நீங்கள் யோசிக்கலாம். ஆனால் சுனாமி வருவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் வெளியான கமலஹாசனின் அன்பே சிவம் படத்திலேயே சுனாமி வார்த்தையை பயன்படுத்தியிருப்பார் கமலஹாசன். அவர் சொன்ன அடுத்த வருடமே சுனாமி உலகை இரண்டாக்கியது.
இரண்டாவது நிகழ்வு கமலஹாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுத கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் தசாவதாரம். இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட வைரஸ் பரவினால் உலகையே அழித்து விடும் என கூறியிருப்பார் கமல். அதுதான் இப்போது நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் கொரானா வைரஸ்.
மூன்றாவது நிகழ்வாக இன்று திரும்பிய பக்கமெல்லாம் இருக்கும் செய்தி என்னவென்றால் ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றிய இதுதான். இதுகுறித்து கமல் ஹாசன் 2013ம் ஆண்டு எழுதி இயக்கிய விஸ்வரூபம் படத்திலேயே தெளிவாக காட்டியிருப்பார்.
இப்படி உலகையே தலைகீழாக புரட்டிப்போடும் பல நிகழ்வுகளை தன்னுடைய படங்களில் ஏற்கனவே கணித்து எழுதிய கமலஹாசன் ஒரு தீர்க்கதரிசி தான் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். இனி கமல்ஹாசனின் ஒவ்வொரு படம் வெளியாகும் போது அதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை கண்டு தீர்வு கண்டு விட்டால் வருங்காலத்தில் வரும் பிரச்சனைகளை சுலபமாக தீர்த்து விடலாம் போல.