உலக நாயகன் கமல்ஹாசன் ஒரே நேரத்தில் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் பயணிக்க தொடங்கிவிட்டார். முதலில் அரசியல் ஆர்வம் அதிகமாக இருந்ததால் கடந்த சில வருடங்களில் அவருடைய சினிமா மயானம் மந்தமாகவே இருந்தது.
ஆனால் தற்போது விட்ட இடத்தை பிடிக்க விருவிருப்பாக களமிறங்கியுள்ளார் கமலஹாசன். அந்த வகையில் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் கமல் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் கமல்ஹாசனுடன் மலையாள நடிகர் பகத் பாசில், விஜய் சேதுபதி என முக்கிய நட்சத்திரங்கள் பலரும் ஒப்பந்தமாகி உள்ளனர். இந்த நேரத்தில்தான் எதிர்பாராதவிதமாக சமீபத்திய பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷிவானி நாராயணன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விக்ரம் படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு செய்தி கிளம்பி வைரலானது.
இது ஷிவானி நாராயணன் ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும் பிக்பாஸ் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளதாம். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான தர்ஷன் என்பவருக்கு தன்னுடைய தயாரிப்பில் ஒரு படம் வாய்ப்புத்தருவதாக கமலஹாசன் கூறியிருந்தார்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் தாண்டியும் அதற்கான எந்த வேலையும் நடைபெறுவதாக தெரியவில்லை. ஆனால் தற்போது தானே தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரித்து நடிக்கும் விக்ரம் படத்தில் கடந்த பிக் பாஸ் சீசன் போட்டியாளரான ஷிவானிக்கு எப்படி வாய்ப்பு கொடுத்தார்? என கமலை சமூக வலைதளங்களில் நோண்டி நொங்கு எடுத்து வருகிறார்கள் பிக்பாஸ் ரசிகர்கள்.
இதனால் ஏண்டா சிவானியை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்தோம் எனும் அளவுக்கு பெரும் மன உளைச்சலில் உள்ளாராம் கமல் ஹாசன். கமல்ஹாசன் வாய்ப்பு தரவில்லை என்றாலும் கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து நடிக்கும் கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் தர்ஷனுக்கு ஹீரோ வாய்ப்பு கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
