விஜய் டிவியின் அஸ்திரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சி இன்னும் ஒரே வாரத்தில் நிறைவடையவுள்ளது. இதனால் பிக்பாஸ் ரசிகர்களிடையே இந்த போட்டியில் யார் வெல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் காணப்படுகிறது.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் காலர் ஆப் தி வீக் என்ற பகுதி நடைபெறும். அப்பொழுது பொது மக்களில் இருந்து ஒருவர் போன் செய்து ஏதேனும் ஒரு பிக்பாஸ் போட்டியாளர்கள் இடம் பேசுவார்கள்.
அந்த வகையில் இந்த வாரம் ஆரி இடம் பேச வேண்டும் என்று போன் செய்த நபர் முழுக்கமுழுக்க ஆரியை விட்டுவிட்டு கமலிடம் விருமாண்டி படத்தைப்பற்றிய கேள்வியை எழுப்பி பிக்பாஸ் மேடையை விருமாண்டி செட்டாக மாற்றிவிட்டார்.
இதனால் கடுப்பான பிக்பாஸ் ரசிகர்கள், விருமாண்டி படமானது பொங்கலுக்கு அமேசான் பிரைம் இல் ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிடுவதால் அதற்கான புரமோஷன் வேலைக்கு கமல், பிக்பாஸ் மேடையை பயன்படுத்துகிறாரா? என்று விமர்சிக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல் இது கமலே எழுதி இயக்கிய படம் என்பதால் விருமாண்டி படத்தில் சண்டியர் என்ற பெயரை செம கெத்தா கேமராவை பார்த்து சொன்னது கொஞ்சம் ஓவரா தான் இருந்தது. மேலும் ஆரியும் விடாமல் கமலிடம் விருமாண்டி படத்தின் பெருமையைப் பேசி கமலுக்கு கொம்பு சீவிவிட்டார்.
அதுமட்டுமில்லாமல் இந்த வார கலர் ஆஃப் தி வீக்கில் பேசிய நபரை விஜய் டிவி தான் செட் பண்ணிருக்காங்க என்ற குற்றச்சாட்டையும் பிக்பாஸ் ரசிகர்கள் முன்வைக்கின்றனர்.