திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கமலுக்கு மீண்டும் வில்லனாகும் விஜய் சேதுபதி.. மாஸ் அப்டேட் கொடுத்த டாப் இயக்குனர்

உலகநாயகன் கமல்ஹாசன் விக்ரம் பட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானிசங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படம் 2023 தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் கமலின் அடுத்தடுத்த படங்களுக்கும் அப்டேட்டுகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஏற்கனவே தலைவன் இருக்கிறான் என்னும் படத்தை தான் இயக்கி, நடிக்க இருப்பதாக கமல் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் தன்னுடைய பிறந்தநாளின் போது இயக்குனர் மணிரத்தினதுடன் இணைந்து பணிபுரிய போகும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

Also Read: 5 பேருக்கு எப்பொழுதுமே சிபாரிசு செய்யும் கமல்.. உலகநாயகன் படத்தை பெரும்பாலும் மிஸ் செய்யாத நடிகர்கள்

இந்த படம் கமலுக்கு 234 வது படமாக அமைய இருக்கிறது. கமல் தன்னுடைய 233 வது படத்தை இயக்குனர் ஹெச் வினோத்துடன் பண்ண இருக்கிறார். இந்த படத்திற்கு KH 233 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு இருக்கிறது. சமீபத்திய விழா ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் இதுபற்றிய தகவலை மேடையில் சொல்லியிருக்கிறார். இப்போது இந்த படத்தின் மற்றொரு அப்டேட் வந்து இருக்கிறது.

அதாவது KH 233 யில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இணையவிருக்கிறார். ஏற்கனவே கமலஹாசனும், விஜய்சேதுபதியும் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் ரிலீசான விக்ரம் திரைப்படத்தில் நடித்தனர். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து மீண்டும் ஹெச் வினோத் இயக்கத்தில் பணியாற்ற இருக்கின்றனர்.

Also Read: சக நடிகர்களை தூக்கிவிட்டு அழகு பார்க்கும் கமல்.. கலைஞர்களை வளர விட மாட்டார் என பேசியது பச்ச பொய்

விஜய் சேதுபதி தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி வில்லன் கேரக்டர் பண்ணிய பேட்ட, மாஸ்டர், விக்ரம் திரைப்படங்கள் எல்லாம் மாஸ் ஹிட் ஆனது. அந்த வரிசையில் இப்போது அவர் ஹெச்.வினோத் கூட்டணியில் கமலுக்கு மீண்டும் வில்லனாக ஒரு ஹிட் கொடுக்க போகிறார்.

இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் KH 233 படத்தின் படப்பிடிப்பானது 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படலாம். இந்த படத்தை கமலஹாசன் தயாரிக்க இருக்கிறார். இந்த படம் அரசியல் கலந்த த்ரில்லராக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. KH 233 படப்பிடிப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

Also Read: இந்தியன் 2 கதை இதுதான்.. கமலை வாட்டி வதைக்கும் ஷங்கர், சேனாதிபதிக்கு கொடுக்கும் நெருக்கடி

Trending News