உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வரும் ஜூன் 3ஆம் தேதி வெளியாக உள்ள விக்ரம் திரைப்படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் பல போட்டிகளில் பங்கேற்று படத்தை புரமோஷன் செய்து வருகின்றனர். இதனிடையே சமீபத்தில் பேட்டி ஒன்றில் கமலஹாசன் தான் சேகரித்த துப்பாக்கிகளை பற்றி பேசியுள்ளார்.இந்நிலையில் தற்போது இந்த பேட்டி பரவலாக வைரல் ஆகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் கிட்டத்தட்ட 120 கோடி ரூபாய் பட்ஜெட் செலவில் படமாக்கப்பட்டுள்ளது. பேன் இந்தியா திரைப்படமாக உருவாகி உள்ள இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில், முழுக்க முழுக்க ஆக்ஷன் நிறைந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
மேலும் இத்திரைப்படத்தின் போஸ்டரிலேயே துப்பாக்கியை மையமாக வைத்து விக்ரம் வார்த்தை அமைந்திருக்கும். இதனால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்து.இதனிடையே உலகநாயகன் கமல்ஹாசன் ஹிட்லர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை மிக அதிகமான விலையைக் கொடுத்தும், மிகவும் சிரமப்பட்டு வாங்கிய துப்பாக்கி தன்னிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஹேராம் படத்தின்போது இந்த துப்பாக்கியை பயன்படுத்தியதையடுத்து தற்போது விக்ரம் திரைப்படத்தில் பயன்படுத்தி உள்ளாராம்.
இந்த துப்பாக்கி மட்டுமல்லாமல் பல துப்பாக்கிகள் கலெக்சன்ஸ் தன்னிடம் உள்ளதாக கமலஹாசன் தெரிவித்ததுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில் திரைப்படத்திற்காக பல துப்பாக்கிகள் தேவைப்பட்ட நிலையில் பலரிடமிருந்து துப்பாக்கிகளை சேகரித்து இருந்தாராம். ஆனால் எம் 16 வகை துப்பாக்கி மட்டும் யாரிடமும் இல்லை என்பதால் கமலஹாசனிடம் அணுகியுள்ளார் லோகேஷ் கனகராஜ். அப்போது கமல் தன்னை அழைத்து சென்று கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட எம் 16 வகை துப்பாக்கியை காட்டினார்.
அதை பார்த்தவுடனேயே நான் ஷாக் ஆகி கமல் சாரிடம், என்ன சார் இவ்வளவு துப்பாக்கி சேர்த்து வச்சிருக்கீங்க என்று கேட்டதாக தெரிவித்துள்ளார். பின்பு அதில் ஒரு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு படத்தில் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார். இதனிடையே நடிகர் கமலஹாசனுக்கு நடிப்பு மட்டும்தான் பிரியம் என்று நினைத்திருந்த வேளையில் இப்படி துப்பாக்கிகளை சேகரிப்பதும் ஒரு வேலையாக வைத்துள்ளார் என்பதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.