செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பிரதீப்பை வெளிய அனுப்பலனா, நா ஷோ விட்டு போயிடுவேன்.. விஜய் டிவியை எச்சரித்த கமல்

Pradeep Antony Red Card: மக்களால் அதிக ஆதரவு பெற்ற விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி ஆரம்பித்தது. கிட்டத்தட்ட ஐந்து வாரங்களை கடந்த நிலையில் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கியமான போட்டியாளர் பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இது பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட முதல் வாரத்திலேயே பிரதீப் தான் இந்த சீசனின் வின்னர் என ஆடியன்ஸ்கள் முடிவெடுத்து விட்டனர். பிரதீப்பிற்கு அமோக ஆதரவு இருந்து வந்த நிலையில், பெல் டாஸ்கில் கூல் சுரேஷ் பொய் சொன்னதாக சொல்லி அவரை ரொம்பவும் மோசமான வார்த்தைகளால் பிரதீப் திட்டியது, ஹவுஸ் மேட்ஸ் மட்டுமல்லாமல், ஆடியன்ஸ்களும் முகம் சுளிக்கும் அளவுக்கு இருந்தது.

பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று சக போட்டியாளர்கள் மற்றும் ஆடியன்ஸ்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இருந்தாலும், பிரதீப் கன்டென்ட் கொடுக்கும் போட்டியாளராக இருந்ததால், நிகழ்ச்சி தரப்பினர் எப்படியாவது சமாளித்து அவரை உள்ளே வைத்து விடுவார்கள் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமை நேற்று தலைகீழாகிவிட்டது.

Also Read:நியாயமில்லாத பிரதீப் எவிக்சன்.. ஆண்டவரின் லீலைகளை அவிழ்த்து விடும் நெட்டிசன்கள்

பிரதீப்புடன் இரவில் தூங்குவதற்கு பயமாக இருக்கிறது என்று பூர்ணிமா குற்றம் சாட்டினார். என்னுடைய இடுப்பில் கட்டி இருக்கும் கயிறை பற்றி தவறாக கமெண்ட் செய்தார் என ரவீனாவும், பாத்ரூம் கதவை பூட்டாமல் பாத்ரூம் போனார், அடிக்கடி என்னை மிரட்டுகிறார் என நிக்சனும் பிரதீப் மீது புகார் தெரிவித்தார்கள். கமல், பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுப்பதற்கு போட்டியாளர்களிடையே ஓட்டெடுப்பு நடத்தினார்.

17 போட்டியாளர்களில் ஐந்து பேர் மட்டுமே பிரதீப்பிற்கு ரெட் கார்டு வேண்டாம் என்று சொல்லி இருந்தார்கள். கமல் இந்த முறை பிரதீப்பை எந்த பதிலுமே சொல்ல விடவில்லை. மேலும் பிரதீப்பை வெளியே அனுப்புவதற்கு நிகழ்ச்சி தரப்பினர் மறுப்பு தெரிவித்தால், நான் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே போய் விடுவேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இறுதியாக பிரதீப் நேற்றைய எபிசோடில் வெளியே அனுப்பப்பட்டார். நேற்று வரை பிரதீப்பை வெளியே அனுப்ப வேண்டும் என்று சொன்ன ஆடியன்சுகள் கூட அதன் பின்னர் வருத்தப்பட்டனர். டைட்டில் வின்னர் ஆக வேண்டிய ஒரு போட்டியாளர் இப்படி வெளியே சென்றிருக்கிறார். கன்டென்ட் கொடுக்கும் ஒரு நபரை வீட்டை விட்டு பிக் பாஸ் வெளியே அனுப்பி இருக்கிறார் என்றால், கண்டிப்பாக வேறு ஏதோ சம்பவம் நடந்து இருக்கும் என தெரிகிறது.

Also Read:ரெட் கார்ட் கொடுத்து வெளியே தள்ளிய ஆண்டவர்.. பிக்பாஸில் நடந்த அதிரடி திருப்பம்

Trending News