சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

துல்கர் இல்லையென்றால் அந்த டைரக்டரே இல்ல.. பக்கவாக கணக்கு போட்டு தூக்கிய ஆண்டவர்

Dulquer Salmaan : துல்கர் சல்மான் தமிழில் ஓகே கண்மணி மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்களில் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் தக் லைஃப் படத்தில் ஒப்பந்தமானார்.

ஆனால் கால்ஷுட் பிரச்சனை காரணமாக இந்த படத்தில் இருந்து விலகி விட்டார். இப்போது அவருக்கு பதிலாக சிம்பு இந்த படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இந்நிலையில் கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிம்பு மற்றொரு படம் நடிக்கிறார்.

இப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இந்த படத்திற்காக சிம்பு பல கலைகளை கற்றுள்ள நிலையில் உடம்பையும் சரமாரியாக குறைத்து இருக்கிறார்.

தேசிங்கு பெரியசாமிக்கு வாய்ப்பு கொடுத்த கமல்

மேலும் இந்த படத்தை கமல் தயாரிக்க காரணம் இருக்கிறது. அதாவது இந்த படத்தில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் கதையை தயார் செய்து புரொடியூசர் இடம் ஸ்டோரியும் சொல்லி ஓகே வாங்கி விட்டார்.

ஆனால் படத்திற்கான ஹீரோ கிடைக்காமல் தடுமாறி இருக்கிறார். அந்த சமயத்தில் தான் துல்கர் சல்மான் தேசிங்கு பெரியசாமியை கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்துள்ளார். மேலு‌ம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இப்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை பார்த்து விட்டு தான் கமல் பக்கவாக கணக்கு போட்டு தான் தேசிங்கு பெரியசாமிக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இப்படம் கண்டிப்பாக வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Trending News