வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ரஜினியின் வேட்டையன் பட வசூல் சாதனையை முறியடித்த கமல்.. இது என்ன பா, புது கதை!

Rajinikanth: நடிகர்கள் சிவனே என்று அவர்களுடைய வேலையை பார்த்தாலும், ஆதரவாளர்கள் என்ற பெயரில் இணையவாசிகள் சும்மா இருப்பது இல்லை. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் வெற்றி நாயகர்களாக வளம் வந்து கொண்டிருக்கிறார்கள் கமல் மற்றும் ரஜினி.

இது என்ன பா, புது கதை!

இருவருடைய திரை களம் வேறு என்றாலும் அவ்வப்போது இந்த வசூல் பிரச்சனை வருவது உண்டு. இந்த நிலையில் நடிகர் ரஜினி நடித்த வேட்டையன் படத்தில் வசூல் சாதனைகளை கமல் முறியடித்து விட்டதாக செய்தி ஒன்று உலா வந்து கொண்டு இருக்கிறது.

வேட்டையன் பட சமயத்தில் கமல் படம் ரிலீஸ் ஆகவே இல்லையே என எல்லோருக்கும் சந்தேகம் வரும். சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் தான் இந்த பஞ்சாயத்துக்கு காரணம். வேட்டையன் படம் 480 கோடி வசூல் செய்திருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் 500 கோடி வசூலை நெருங்கி இருக்கிறது.

இந்த படத்தை கமலஹாசன் தயாரித்திருக்கிறார் என்பதால் தான் இந்த புது பிரச்சனை தொடங்கி இருக்கிறது. ஒரு பக்கம் ரஜினியின் வசூலை கமல் தாண்டிவிட்டார் என ஒரு கூட்டம் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் வேட்டையன் போன்ற ஒரு கதையில் சிவகார்த்திகேயன் நடித்து இத்தனை கோடி வசூல் செய்ய முடியுமா என இன்னொரு கூட்டம் பொங்கி எழுந்து கொண்டிருக்கிறது. மொத்தத்தில் கமல் ரஜினி பிரச்சனையில் சிவகார்த்திகேயனின் தலை தான் உருளுகிறது.

Trending News