Simbu and Kamal: காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி என்று புலம்பிய படி சிம்பு கிட்டத்தட்ட பல மாதங்களாக கமலுக்காக காத்துக் கொண்டிருந்தார். அதாவது STR 48வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கப் போவதாக இருந்தது. அந்த வகையில் பஸ்ட் போஸ்டர் வெளியான நிலையில் படத்தின் பட்ஜெட் சுமார் 250 கோடி வரை தாண்டும் என்று சொல்லப்பட்ட நிலையில் கமல் இதெல்லாம் நமக்கு ஒத்து வராது என்று மௌனம் காத்தே வந்தார்.
எத்தனையோ முறை சிம்பு, கமலிடம் இதைப் பற்றி கேட்டு அலுத்து போய்விட்டார். அதனால் இனியும் அவரை நம்ப முடியாது என்பதற்காக வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என பதிலை சொல்லுமாறு கேட்டிருக்கிறார். அதற்கு கமல் அதிக பட்ஜெட்டில் என்னால் செலவழிக்க முடியாது என்று கஞ்சித்தனத்தை காட்டி சிம்புவுக்கு பெரிய நாமத்தை போட்டுவிட்டு இப்படத்திலிருந்து விலகி விட்டார்.
சிம்புவை ஆசை காட்டி மோசம் பண்ண கமல்
இதனால் வேறு வழி இல்லாமல் சிம்பு என்ன பண்ணுவது என்று யோசித்த நிலையில் தன் மகனுக்காக தான் ஏதாவது பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் உஷா மற்றும் டி ராஜேந்திரனின் கம்பெனியாக இருக்கும் ஆத்ம சிலம்பரசன் டிஆர் நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரிக்கலாம் என்று முடிவு பண்ணி விட்டார்கள்.
தற்போது இவர்கள் தயாரிக்கும் இப்படத்தின் பட்ஜெட் 200 கோடி வரை என்று தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த வருடம் துவக்கத்திலேயே தொடங்கிவிடலாம் என்று முடிவு பண்ணி வைத்திருக்கிறார்கள். மேலும் இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் கமிட்டாகி இருக்கிறார்.
ஆக மொத்தத்தில் கமலுக்காக இவ்வளவு நாள் காத்துக் கொண்டிருந்த சிம்புவுக்கு எல்லாமே வேஸ்ட் என்கிற மாதிரி இதுவரை வேறு எதிலும் கமிட் ஆகாமல் இருந்திருக்கிறார். இது ஏற்கனவே கமல் முடிவு பண்ணிய நிலையில் தான் சிம்புவை பகைத்துக்க கூடாது என்பதற்காக ஒரு சப்பக்கட்டாக தான் அவர் நடிக்கும் தக் லைப் படத்தில் சிம்புக்கு ஒரு கதாபாத்திரத்தை கொடுத்து இருக்கிறார். ஆண்டவரைப் பற்றி தெரியாமல் சிம்புவும் ஆசையுடன் காத்திருந்து மோசம் போய்விட்டார்.
ஆனாலும் கமல், சிம்புவை நிராகரித்ததற்கான காரணம் தற்போது இவருக்கு சொல்லும் படியான மார்க்கெட் எதுவும் இல்லை. அத்துடன் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்களும் பெரிய லாபத்தை கொடுக்கவில்லை. அடுத்து கமலுக்கும் இந்தியன் 2 படத்தில் மிகப்பெரிய அடி விழுந்ததால் இப்போதைக்கு பெரிய ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார். இதைத் தொடர்ந்து அடுத்த வருடம் ஆவது சிம்பு நடிப்பில் STR48 படம் வெளிவருமா என்று பொருத்திருந்து பார்க்கலாம்.
கமலை முழுமையாக நம்பிய சிம்பு
- சிம்புவின் அடுத்த படத்தின் பட்ஜெட் 180 கோடியா!.
- ஒரு ஜான் ஏறினால் மூன்று அடி சறுக்கும் சிம்பு
- உலக நாயகன் இருக்கும் இடத்தில் சிம்புக்கு கிடைத்த ராஜ மரியாதை