வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இறுதி அஞ்சலி செலுத்த வராத கமல்.. கிளம்பிய எதிர்ப்பு, உண்மையான நண்பனாக செய்த கடைசி மரியாதை

மிகப்பெரும் கலைஞரான சரத்பாபுவை நம் தமிழ் திரையுலகம் தற்போது இழந்துள்ளது. ஏற்றுக்கொள்ள முடியாத இந்த மரணச் செய்தியை பலரும் வேதனையோடு கடந்து வருகின்றனர். மூன்று மாத காலத்திற்கும் மேலாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த சரத்பாபு ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அது பலனளிக்காத நிலையில் தற்போது அவர் நம்மை விட்டு நீங்கி இருப்பது நம்ப முடியாத ஒரு விஷயமாகவே இருக்கிறது. ரசிகர்களே இந்த அளவுக்கு வேதனை படுகிறார்கள் என்னும் போது அவருடன் பல வருடங்களாக நட்பு கொண்டிருந்த பிரபலங்களுக்கு எப்படி இருக்கும். இதைத்தான் பலரும் வருத்தத்தோடு கூறுகின்றனர்.

Also read: மரணப் படுக்கையில் சரத்பாபு வாங்கிய கடைசி சத்தியம்.. உயிர் பிரிந்தும் கண்கலங்க வைத்த எஜமான்

அந்த வகையில் ரஜினி, சரத்குமார், சூர்யா உட்பட பலரும் நேரில் சென்று சரத்பாபு உடலுக்கு தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள். ஆனால் கமல் மட்டும் இதில் பங்கேற்கவில்லை. இது பெரும் சலசலப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்திய நிலையில் சுஹாசினி அதற்கான காரணத்தையும் விளக்கினார்.

அதாவது கமல் இந்தியன் 2 படப்பிடிப்பில் இருப்பதாலும், அதற்கான மேக்கப் போட்டுள்ளதால் பொது இடத்திற்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மரணச் செய்தியை கேட்ட உடனேயே அவர் சரத்பாபுவின் உடன் பிறந்தவர்களுக்கு போன் செய்து தன் வருத்தத்தை தெரிவித்ததாகவும் மீடியா முன்பாக அவர் கூறினார். இதனால் இந்த சலசலப்பு கொஞ்சம் ஓய்ந்தது.

Also read: சரத்பாபுக்கு தயாரிப்பாளராக சம்பளம் போட்ட பயில்வான்.. குறை சொல்ல முடியாமல் கண்கலங்கிய சம்பவம்

இந்நிலையில் கமல் வரவில்லை என்றாலும் தன் நண்பனுக்காக செய்த செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அதாவது அவர் சரத்பாபு உடல்நல குறைவாக இருக்கும் போதே அவ்வப்போது மருத்துவரிடமும், குடும்பத்தினரிடமும் விசாரித்து வந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று ரஜினி, கமல் உட்பட பல நட்சத்திரங்களும் முயற்சி செய்து இருக்கின்றனர்.

ஆனாலும் நிலைமை கைமீறி சென்று விட்டது. அதை தொடர்ந்து அவர் ராஜ்கமல் நிறுவனம் சார்பாக 15 நபர்களை உடனே அனுப்பி இருக்கிறார். மேலும் இறுதி சடங்குக்கு தேவையான அத்தனை வேலைகளும் அவர்களே முன்னிருந்து செய்து இருக்கின்றனர். இவ்வாறாக கமல் தன் நண்பனுக்காக வர முடியாத சூழலிலும் இறுதி மரியாதையை செலுத்தி இருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Also read: யாரும் அறியாத சரத்பாபுவின் மறுபக்கம்.. இரண்டு மனைவிகள் இருந்தும் கிசுகிசுக்கப்படாத ஒரே நடிகர்

Trending News