வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

போட்டியாளர்களுக்கு அல்வாவை கொடுத்த கமல்.. பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் பிக் பாஸ்

Bigg Boss Season 7: பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பித்ததில் இருந்து சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் மக்களின் ஆதரவை பெற்று வந்தது. ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில் அதிரடியாக பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டது தற்போது சர்ச்சையாகி வெடித்து வருகிறது. முக்கியமாக கமல் சொன்ன தீர்ப்பு முற்றிலும் ஒருதலைப் பட்சமாக இருக்கிறது.

பிரதீப் தவறு செய்கிறார் என்றால் ஆரம்பத்திலேயே கண்டித்திருக்க வேண்டும், அதை விட்டுவிட்டு இத்தனை நாட்களாக வேடிக்கை பார்த்துட்டு தற்போது தண்டனை வழங்கியது மிகப்பெரிய தவறானது. இதனால் பிரதீப்புக்கு ஆதரவாக மக்கள் அவர்களுடைய ஆதங்கத்தையும், கமல் செய்த தவறையும் கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் பிரதீப் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் கமல் மற்ற போட்டியாளர்களுக்கு அல்வா கொடுத்து சர்ப்ரைஸ் பண்ணுகிறார். இதை எதிர்பார்க்காத ஹவுஸ் மேட் ரொம்பவே ஜாலியாக உற்சாகமாக மாறிவிட்டார்கள். ஆனால் அந்த அல்வாவுக்கு பின்னணியில் தான் கமலின் ராஜ் தந்திரமே இருக்கிறது.

Also read: திடீர்னு கட்டிப்புடிச்சு, முத்தம் கொடுத்துட்டார்.. புகாரில் சிக்கிய பிக் பாஸ் பெண் போட்டியாளர்

அதாவது கமல் கொடுத்த அல்வா ஒண்ணும் சாதாரண அல்வா இல்ல. பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட கசப்பான பாவக்காய் அல்வா. இதை வைத்து ஒரு டாஸ்கை நடத்துகிறார் கமலஹாசன். கசப்பான அனுபவத்தை கொடுத்த போட்டியாளர்களுக்கு இந்த அல்வாவை கொடுக்க சொல்கிறார்.

இதனால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு வேண்டாதவர்களுக்கு கசப்பான அல்வாவை கொடுத்து அவர்களின் வஞ்சத்தை தீர்த்துக் கொள்கிறார்கள். இதையே தான் பொழப்பாக பிக் பாஸ் பல விஷயங்களை செய்து கொண்டு வருகிறது. ஆக மொத்தத்தில் பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமே.

இதற்கிடையில் தெரியாத்தனமாக மாட்டிக் கொண்டு அவப்பெயருடன் பிரதீப் ரெட் கார்டு வாங்கி வெளியே வந்தது தான் தற்போது ஜீரணிக்க முடியாத அளவிற்கு இருக்கிறது. ஏனென்றால் பிரதீப் கெட்டவன்னு சொல்வதற்கு அங்கே இருப்பவர்கள் ஒன்னும் அவ்வளவு நல்லவங்க இல்ல. அதே மாதிரி பிரதீப் பிக் பாஸ்க்குள் இருந்தால்  பெண்களின் பாதுகாப்புக்கு நல்லது இல்லை. என்று வீட்டை விட்டு அனுப்பிய கமல் அவர்களும் நியாயமான தீர்ப்பை கொடுக்கவில்லை என்று மக்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.

Also read: பிரதீப்பை வெளிய அனுப்பலனா, நா ஷோ விட்டு போயிடுவேன்.. விஜய் டிவியை எச்சரித்த கமல்

Trending News