வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

28 வருடங்களாக ஒதுங்கி இருந்த கமல்.. பாகுபலி நாயகனால் வந்த திடீர் மன மாற்றம்

Actor Kamal: உலகநாயகன் இப்போது நிற்க கூட நேரம் இல்லாமல் பறந்து கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் அரசியல் ஒரு பக்கம் சினிமா என இரட்டை குதிரைகளில் சவாரி செய்து வரும் இவர் தயாரிப்பு வேலைகளையும் ஒரு பக்கம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.

அந்த வகையில் சிம்பு, சிவகார்த்திகேயன் என இவருடைய தயாரிப்பில் முன்னணி நாயகர்கள் நடித்து வரும் நிலையில் கமல் இந்தியன் 2, மணிரத்னத்துடன் ஒரு படம் என பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ப்ராஜெக்ட் கே படத்தில் இவர் நடிக்க இருக்கும் அறிவிப்பு வெளியானது பலருக்கும் ஆச்சரியம் தான்.

Also read: கவுண்டமணியை ஒதுக்கிய ரஜினி, கமல்.. திருப்பி அடித்த கர்மா

ஏற்கனவே இது குறித்த பல செய்திகள் வெளிவந்தாலும் வில்லனாக நடிக்க கமல் எப்படி ஒப்புக்கொண்டார் என்ற கேள்வி தற்போது அனைவர் மனதிலும் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் இவருக்கு பேசப்பட்ட சம்பளம் தான். அது மட்டும் இன்றி அந்த வில்லன் கதாபாத்திரம் ரொம்பவும் பவர்ஃபுல்லாக இருக்குமாம்.

இதன் காரணமாகவே கமல் 28 ஆண்டு தவத்தை பாகுபலி நாயகனால் தற்போது உடைத்திருக்கிறார். எப்படி என்றால் கமல் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டங்களில் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ரவுண்டு கட்டி நடித்தார். ஆனால் 1995-க்கு பிறகு அவர் மற்ற மொழி படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

Also read: வறுமையை வைத்து எடுக்கப்பட்ட மறக்க முடியாத 5 படங்கள்.. வேலையில்லா இளைஞரின் பசி கொடுமையை காட்டிய கமல்

ஆனால் இவருடைய பல படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. இருப்பினும் தமிழில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த உலகநாயகன் இப்போது நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் 1995 ஆம் ஆண்டு வெளியான சுபா சங்கல்பம் என்ற படத்திற்கு பிறகு கமல் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவில்லை.

அந்த வகையில் தற்போது மீண்டும் அவர் தெலுங்கு பக்கம் செல்வது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பான் இந்தியா படமாக உருவாகும் பிராஜெக்ட் கே படத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ் உள்ளிட்ட நடிகர்களும் இருப்பது தற்போது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் உலக நாயகனின் வில்லத்தனத்தை காண ரசிகர்கள் இப்போதிலிருந்தே தவம் இருக்க ஆரம்பித்துள்ளனர்.

Also read: பப்ளிசிட்டிக்காக பண்ற வேலை.. கமல் காரெல்லாம் கொடுக்கல ஷர்மிளா தந்தை

Trending News