ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அடுத்தடுத்து இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியை லாக் செய்த கமல்.. கப் சிப்னு வாலை சுருட்டிக் கொள்ளும் ஹீரோக்கள்

Actor Kamal: விக்ரம் படத்திற்கு பிறகு கமல் மேற்கொள்ளும் முயற்சிகள் வேற லெவலில் இருந்து வருகிறது. அவ்வாறு கமல் தன் தயாரிப்பின் கீழே அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி உள்ளார். இந்நிலையில் இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் 2 படங்களின் தேதியை லாக் செய்துள்ளார்.

கமல் நடிப்பில் பெரிதாய் பார்க்கப்படும் படமான இந்தியன் 2 ஷங்கர் தயாரிப்பில் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்த வருடம் படம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், இப்படம் தாமதம் குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read: பிரம்மாண்ட செலவாளி ஷங்கர் என்ற பெயரை மாற்றும் இந்தியன் 2.. 90% பணத்தை இப்பவே எடுத்த லைக்கா

இதைத்தொடர்ந்து கமல் டோலிவுட் நடிகரான பிரபாஸ் உடன் இணைந்து நடிக்கும் படம் தான் ப்ராஜெக்ட் கே. பிரமாண்டமாய் பல பிரபலங்களை வைத்து படம் உருவாக உள்ள நிலையில், இப்படத்தில் கமல் வில்லன் கதாபாத்திரம் ஏற்பதாக வெளிவந்த தகவல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

அதைத் தொடர்ந்து இப்படம் இரண்டு பாகங்களாய் வெளியாகும் எனவும் தகவல் கசிந்தது. தமிழ் சினிமாவில் இதுவரை யாருக்கும் வில்லனாய் நடிக்காத கமல், இப்படத்தில் இளம் நடிகரான பிரபாஸருக்கு வில்லனாய் களம் இறங்குகிறார். அதுவும் குறுகிய நாட்களில் இவரின் படப்பிடிப்பு முடிந்து விடும் எனவும் கூறப்படுகிறது.

Also Read: கொண்டாடும்போதே வழி மாறி முடிவெடுத்த 3 ஹீரோக்கள்.. சந்தானத்தை போல ஏமாறும் இரண்டு நடிகர்கள் 

அதைத்தொடர்ந்து இப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அதுவும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 முடிவுக்கு வந்த நிலையில் இப்படம் இந்த தீபாவளி அல்லது பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து பல படங்கள் வெளிவர போட்டி நிலவுவதால், ஆண்டவர் தன் படம் குறித்த தேதியை அடுத்த வருடம் லாக் செய்துள்ளார்.

இவர் கொடுத்த ஷாக், மற்ற ஹீரோக்களை கப் சுப்புன்னு வாலை சுருட்டும் விதமாய் இருந்து வருகிறது. அதை தொடர்ந்து கமலின் இந்தியன் 2 அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் எனவும், ப்ராஜெக்ட் கே அதை தொடர்ந்து மே மாதம் வெளியாகும் எனவும் தன் படத்திற்கான தேதியை லாக் செய்துள்ளார்.

Also Read: ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த விஜய் சேதுபதியின் ஜவான் பட போஸ்டர்.. ஷாருக்கானுக்கு வில்லனா சும்மாவா

Trending News