செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பணத்திற்காக இப்ப தூக்கி வைத்து கொண்டாடும் கமல்.. ஆரம்பத்தில் VSP-யை ஏற்று கூட பார்க்காத சம்பவம்

கமல் பல வருடங்கள் வெற்றி கொடுக்காமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மற்றும் அரசியல் கட்சியைத்தொடங்கி நாட்களை கடத்தி வந்தார். அவரே எதிர்பார்க்காத விதமாக விக்ரம் திரைப்படத்தின் வெற்றி அவரை திக்குமுக்காடச் செய்தது.அவர் சினிமா வாழ்க்கையில் இதுவரை இப்படி ஒரு வெற்றியை பார்த்ததில்லை என்று கூறலாம்.

தற்போது கமல் புது உத்வேகத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கிறார். காரணம் படத்தின் வெற்றி.இந்த வெற்றியின் காரணமாக பழைய படங்களை தூசி தட்டிக் கொண்டிருக்கிறார்.குறிப்பாக வேட்டையாடு விளையாடு-2, இந்தியன்-2, தேவர் மகன்-2 என்று சொல்லிக்கொண்டே போகலாம்.அடுத்து இவர் தயாரிப்பில் அனைத்து ஹீரோக்களையும் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

Also Read: ரஜினி, கமல் கைவிட்ட அந்த மாதிரியான படங்கள்.. வாய்ப்பில்லை என வெளிப்படையாக பேசிய சூப்பர் ஸ்டார்

விக்ரம் வெற்றியில் முக்கியப் பங்கு விஜய் சேதுபதிக்கும் இருக்கிறது. இதனை கமலை ஒப்புக்கொண்டார்.இதனால் தேவர் மகன்-2, இந்தியன்-2 போன்ற படங்களில் விஜய் சேதுபதிக்கு முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட உள்ளது என்று செய்திகள் வெளிவந்துள்ளது.விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க கமல் தயாரிக்கவும் உள்ளார்.இப்படி விஜய் சேதுபதி மேல் கமலுக்கு இப்பொழுது மரியாதை அதிகமாக காணப்படுகிறது காரணம் அவரது வளர்ச்சி.

2018 இல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழ் நடிகர்கள் உண்ணாவிரத போராட்டம் செய்தனர். இதில் அனைத்து சினிமா கலைஞர்களும் கலந்து கொண்டனர்.அதில் விஜய் சேதுபதியும் ஒருவர். ஆனால் அப்பொழுது அவர் ஒரு சாதாரண நடிகர். கமலும்,ரஜினியும் கலந்து கொண்டனர் அனைத்து நடிகர்களுக்கும் கமல் கை கொடுக்கும் பொழுது விஜய்சேதுபதியை மட்டும் கண்டுக்க வில்லை.இதில் விஜய் சேதுபதி என்ன சொல்வதென்று தெரியாமல் தலை குனிந்து நின்றார்.

Also Read: நடிக்க விடாமல் அசிங்கப்படுத்திய கமல்.. சரியான நேரத்தில் பழி வாங்கிய பிரபலம்

ரஜினி அவர்கள் இதனை செய்யாமல் ரொம்ப நாள் பழகியவர் போல் பேசி கை கொடுத்து சென்றார்.இது ரஜினியின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. பேட்ட படத்தில் நடிக்கும் போது கூட பழக்கம் ஏற்பட்டு இருக்கும் ஆனால் அப்பொழுது யாரென்றே தெரியாத ஒரு நடிகருக்கு இப்படி மரியாதை கொடுத்த ரஜினி. கமல் ஏன் இப்படி ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று இந்த வீடியோவை பார்த்து இப்பொழுது அனைவரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

அது ஒரு புறமிருக்க இப்போது விஜய் சேதுபதி தலையில் வைத்துக் கொண்டாடி வரும் கமல்.எல்லாம் பணத்திற்காக என்று நன்கு புரிகிறது என்று சினிமா பிரபலங்கள் கூறி வருகின்றனர்.நேரத்திற்கும், காலத்திற்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றுபவர் கமல் என்று நன்றாக புரிகிறது என்று இப்போது ரசிகர்கள் அனைவரும் பேசி வருகின்றனர் இந்த வீடியோவை பார்த்து.

Also Read: அனைவரையும் வாழவைக்கும் சினிமா, என்னை மட்டும் எதிர்த்தது.. உண்மையை சொன்ன கமல்

Trending News