புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இந்தியன்-2 ரிலீஸ் தேதியை லாக் செய்த கமல்.. விக்ரம் வசூலை முறியடிக்க வரும் ஷங்கர்

Actor Kamal: இயக்குனர் ஷங்கர் படம் என்றாலே எதிர்பார்ப்பிற்கு பஞ்சம் இல்லை. அந்த அளவிற்கு பிரமாண்டமான படங்களை இயக்கி வெற்றி கண்டவர். இந்நிலையில் இவர் கமலை வைத்து மேற்கொள்ளும் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

1996ல் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்த படம் தான் இந்தியன். இப்படத்தின் பாகம் 2 தற்பொழுது இவர் மேற்கொண்டு, படப்பிடிப்பிற்கு அதிக செலவு செய்யப்பட்ட பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் சித்தார்த், ராகுல் பிரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

Also Read: பீடா கடையில் வேலை பார்த்து வந்த நடிகர்.. பாரதிராஜா படத்தில் நடித்தும், தோல்வி முகம் காட்டிய பரிதாபம்

விக்ரம் படத்திற்கு பிறகு கமல் மேற்கொள்ளும் இப்படம் வசூல் ரீதியான வெற்றியை பெற படப்பிடிப்பை பல லொகேஷன் இல் நடைபெற்று தற்பொழுது இறுதி கட்டத்தில் இருந்து வருகிறது. முக்கிய தரப்பு காட்சிகள் எல்லாம் படமாக்கப்பட்ட நிலையில் தற்பொழுது சின்ன சின்ன காட்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இப்படத்திற்குரிய அப்டேட்டை நாளுக்கு நாள் எதிர்பார்க்கும் நிலையில், தற்பொழுது வெளியாகி உள்ள செய்தி என்னவென்று பார்க்கையில், சித்தார்த் தன் பட காட்சிக்கு டப்பிங் செய்து வருவதாகவும், மேலும் சென்னை ஏர்போர்ட்டில் சில காட்சிகளை மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

Also Read: கருப்பு அழகியாய் சினிமாவில் சாதித்து காட்டிய 5 நடிகைகள்.. ரஜினியை, மருமகளாய் புரட்டி எடுத்த சரிதா

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் இம்மாதம் இறுதிக்குள் முடிவாகிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு இருக்க இப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது. ரிலீஸ் தேதியை குறித்து ஷங்கர் எதுவும் சொல்லாத நிலையில், கமல் தற்பொழுது ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளார்.

இந்த வருட தீபாவளிக்கு லியோ படம் வெளிவரும் என்பதால், அடுத்தடுத்து ரிலீசானால் எதிர்பார்ப்பு இருக்காது என்பதற்காக அடுத்த ஆண்டு 2024 பொங்கல் ரிலீஸ் ஆக இந்தியன் 2 வெளியாகும் என்று உலகநாயகன் இத்தேதியை லாக் செய்து உள்ளாராம்.

Also Read: சிம்புவுக்கு மீண்டும் கொடுக்கப்படும் ரெட் கார்ட்.. விதண்டாவாதமாக வம்பு பண்ணும் ஐசரி கணேஷ்

Trending News