திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எல்லாத்துலயும் மூக்கை நுழைக்கும் கமல்.. ஹேண்டில் பண்ண முடியாமல் வெறுத்த பாலா

கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து படுஜோராக வேலை பார்த்து வருகிறார். தற்போது நடிப்பதை காட்டிலும் இளம் நடிகர்களை வைத்து படத்தை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் பாலா, கமல் காம்பினேஷனை யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

அப்படிப்பட்ட இவர்கள் இருவரும் ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. அதாவது கிடாரி புகழ் வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப் பரம்பரை நாவலை படமாக எடுக்க பல இயக்குனர்கள் முன் வந்தனர். முதலில் பாரதிராஜா இந்த படத்தை சிவாஜி மற்றும் சரத்குமாரை வைத்து எடுக்க முயற்சி செய்தார்.

Also Read : ரஜினிக்கு 3 பெக்கில் ஏறாத போதை.. தெளிய தெளிய அடித்த கமல் கதாபாத்திரம்

அது பாதியிலேயே தடைபட்ட போக குற்றப்பரம்பரை படத்தை இயக்க பாலா முற்பட்டார். அப்போது இந்த படத்தில் கதாநாயகனாக கமலை வைத்து எடுக்க தான் பாலா நினைத்திருந்தார். கமல்ஹாசனிடம் குற்றப் பரம்பரை கதையையும் பாலா கூறியுள்ளார்.

ஆனால் கமல்ஹாசன் எப்போதுமே கதையில் தலையிடுவார். இதை மாற்றங்கள், அதை மாற்றுங்கள் என்று கூறுவார் என்ற பயத்தில் தனக்கு அந்த படத்தில் சுதந்திரம் கிடைக்காது, அதுமட்டுமின்றி மற்ற நடிகர்கள் போல கமலை அதட்டி உருட்டி வேலை வாங்க முடியாது என்பதால் பாலா இந்த படத்தை அப்படியே டீலில் விட்டு விட்டார்.

Also Read : மாஸ்டருக்கு எதிராக சாட்டையை சுழற்ற போகும் கமல்.. வஞ்சத்தால் பழி வாங்கப்பட்ட போட்டியாளர்

இதைத்தொடர்ந்து நாச்சியார் படம் எடுப்பதற்காக பாலா சென்று விட்டாராம். ஆனால் இப்போது கமலின் மார்க்கெட் வேற லெவலில் உள்ளது. மேலும் பாலா சூர்யாவை வைத்து எடுத்து வந்த வணங்கான் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

ஆகையால் இப்போது கமலை வைத்து குற்றப் பரம்பரை படத்தை எடுக்க பாலா ஆசைப்படுகிறார். ஆனால் தற்போது கமல் முன்னணி இயக்குனர்களான மணிரத்தினம், லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குனர்களின் படங்களில் கமிட் ஆகியுள்ளதால் பாலா படத்தில் நடிக்க மறுத்துள்ளார்.

Also Read : இரண்டரை கோடியை தூக்கி கொடுத்த உதயநிதி.. கட்சிக்கு நிதி வேண்டாம் என மெய்சிலிர்க்க வைத்த கமல்

Trending News