திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கமலிடமிருந்து ஆட்டைய போட்ட லோகேஷ்.. 65 லட்சத்துக்கு ஆடம்பர காரை வாங்கியும் பிரயோஜனம் இல்ல

Kamal and Lokesh: என்னதான் ஒருவர் உச்சாணி கொம்பில் இருந்தாலும் அவர்களுக்கு இருக்கும் ஆசை மட்டும் எப்பொழுதுமே குறையவே செய்யாது. அதுபோல் தான் லோகேஷ்க்கும் கார் மீது அதீத பேராசை இருக்கிறது. கார் மட்டும் இல்ல பைக் மற்றும் லேட்டஸ்ட் வாகனங்களின் மீது எப்போதுமே அளவு கடந்த ஆசையை வைத்து விடுவார்.

இவரைப் பற்றி தெரிஞ்சதனால்தான் இவருக்கு யாராவது அன்பளிப்பு கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் உடனே காரை பரிசாக கொடுத்து விடுகிறார்கள். அந்த வகையில் லோகேஷ் இடம் RX 100 ஜாவா பைக் வைத்திருக்கிறார். அத்துடன் ஷெடான் வகை கார்கள் ரொம்பவே இவருக்கு பிடிக்குமாம்.

அது மட்டுமில்லாமல் BMW 7 சீரியஸ் காரை இப்போதைக்கு வைத்திருக்கிறார். இக்காரின் மதிப்பு கிட்டத்தட்ட 1.70 கோடி இருக்குமாம். மேலும் கமல், விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ்க்கு கிப்ட் ஆக 65 லட்ச ரூபாய் மதிப்புள்ள லக்சரி கார் வகையை சேர்ந்த ES 300h காரை வாங்கி கொடுத்திருக்கிறார்.

Also read: லோகேஷ் பெயரை கெடுக்க இப்படி ஒரு மட்டமான வேலையா.? அத தூக்கி குப்பைல போடுங்க

போதாக்குறைக்கு விக்ரம் படத்தில் கமல் யூஸ் பண்ணிய டிஃபெண்டர் கார் தற்போது லோகேஷ் தான் வைத்திருக்கிறார். ஏனென்றால் கமல் யூஸ் பண்ணியது என்று ஒரு ஆசையுடன் அவரிடமிருந்து இதை ஆட்டையை போட்டு இருக்கிறார். கமல் லோகேஷுக்கு லக்சரி காரை கிப்டாக வழங்கியும், கமலிடம் அந்த டிஃபெண்டர் காரை இன்னும் வரை கொடுக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து லோகேஷ் அடுத்ததாக இரும்புக்கை மாயாவி, கைதி 2, தலைவர் 171 போன்ற முன்னணி நடிகர்களை வைத்து இயக்கப் போகிறார். அப்படி இருக்கும் பட்சத்தில் ஒவ்வொருவரும் லோகேஷுக்கு கிப்ட் கொடுக்கப் போகிறார்கள் என்றால் அதுவும் அந்த நேரத்தில் இருக்கும் லேட்டஸ்ட் காரை தான் கொடுத்து , லோகேஷை குஷிப்படுத்துவார்கள்.

இதையெல்லாம் பார்க்கும் பொழுது தான் ஒன்று புரிகிறது. திறமை இருந்தால் என்ன வேண்டுமானாலும் சாதிக்க முடியும். எதை வேண்டுமானாலும் பெற முடியும் என்பதற்கு உதாரணமாக லோகேஷின் கேரியர் அடுத்தடுத்து உச்சகட்டத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது.

Also read: பல பேரோட சாவ வச்சு சம்பாதிச்சதுல சக்ஸஸ் மீட்டா.? லோகேஷ் ஹீரோவின் நிஜ முகம்

Trending News