புதன்கிழமை, நவம்பர் 20, 2024

இந்த வாரம் கமல் வருவாரா.? ரம்யா கிருஷ்ணனுக்கு கும்பிடு போட்டு வழியனுப்பும் ரசிகர்கள்

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி மட்டுமல்லாமல் இதுவரை நடந்து முடிந்த நான்கு சீசன்களையும் சிறப்பாக தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமலஹாசன், கடந்த வாரம் கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனவே மிதமான அறிகுறியுடன் சிகிச்சை பெற்று தற்போது கமலஹாசன் வீடு திரும்பியுள்ளார்.

அத்துடன் டிசம்பர் 3ஆம் தேதியான இன்று வரை கமலஹாசன் அவர்களை தனிமையில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன் பிறகு டிசம்பர் 4ஆம் தேதியான நாளை முதல் வழக்கம் போல் அவருடைய பணிகளை தொடங்கலாம் என்று சமீபத்தில் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை சமூகவலைதளங்களில் வெளியிட்டது.

எனவே இந்த தகவலை அறிந்த பிக்பாஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். ஏனெனில் கடந்த வரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க முடியாத நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். ஆனால் இந்த வேலையில் கமலஹாசன் தவிர வேறு எவரும் திறம்பட செய்ய முடியாது என்பது ரசிகர்களின் கருத்தாக அமைந்துவிட்டது.

அத்துடன் கமல் எந்த இடத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களை கண்டிக்க வேண்டும், எந்த இடத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களை தடவிக் கொடுக்க வேண்டும் என்ற நேக்கு பொக்கை சரியாக செய்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாஸ் காட்டுவார்.

ஆனால் அந்த சாமர்த்தியம் ரம்யா கிருஷ்ணன் அவர்களுக்கு இல்லை. இருப்பினும் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்தார். எனவே இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கப் போகிறார் என்ற செய்தி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

அத்துடன் நாளை வெளியாகும் புரோமோ மூலம் இந்தத் தகவல் உண்மை என்று உறுதியாகி விடும். ஒரு வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமலை பார்க்க முடியாமல் ஏங்கிய பிக் பாஸ் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் இந்த வாரம் அவருடைய வருகைக்காக காத்துக் கிடக்கின்றனர்.

- Advertisement -spot_img

Trending News